CSIR – தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனம் (NGRI) 12 நிரந்தர மல்டி-டாஸ்கிங் ஸ்டாப் (MTS) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மாதம் ரூ.35,973/- சம்பளத்தில் இந்த மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசு வேலை உங்களுக்குதான்

மத்திய அரசு அமைப்பான CSIR – தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனம் (NGRI) 2025க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு எண் 06/2025 படி மொத்தம் 12 மல்டி-டாஸ்கிங் ஸ்டாப் (MTS) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலை முழுக்க நிரந்தர பணியிடங்களாகும் என்பதால் அரசு வேலையை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ஹைதராபாத் பணியிடமாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் 05 ஜனவரி 2026 வரை மட்டுமே ஏற்கப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வேலை தொடர்பான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு 05.01.2026 தேதியின்படி அதிகபட்சம் 25 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிப்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டு, OBC க்கு 3 ஆண்டு, PwBD விண்ணப்பத்தாரர்களுக்கு கூடுதல் தளர்வு வழங்கப்படும். சம்பளமாக லெவல்-01 பிரிவில் மாதம் ரூ.35,973/- வழங்கப்பட உள்ளது. தேர்வு முறையில் முதலில் Trade Test, பின்னர் எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் திறமை அடிப்படையில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றி நியமனம் செய்யப்படும்.

நல்ல சான்ஸ், டோன்ட் மிஸ்

விண்ணப்பிக்கும் முறையாக அதிகாரப்பூர்வ இணையதளமான www.ngri.res.in தளத்தில் சென்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பெண்கள், SC/ST, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்றவற்களுக்காண விண்ணப்பதாரர்கள் ரூ.500/- கட்டணம் செலுத்த வேண்டும். கடைசி தேதி நெருங்கிவருவதால் தகுதி உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து அரசு வேலை பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.