Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரைட்ஸ் நிறுவனம் 400 உதவி மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பொறியியல் மற்றும் பார்மசி பட்டதாரிகள் இந்த அரசு வேலை வாய்ப்புக்கு டிசம்பர் 25, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அரசு வேலை கனவு கொண்டவர்களுக்கு வாய்ப்பு
ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ரைட்ஸ் (RITES) நிறுவனம் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் 400 உதவி மேனேஜர் (Assistant Manager) பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவித்து உள்ளது. இந்திய ரயில்வேயின் முக்கிய பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான ரைட்ஸ், இந்நியமனம் மூலம் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டெலிகம்யூனிகேஷன், உலோகவியல் (Metallurgy), கணினி அறிவியல் (CSE), பார்மசி உள்ளிட்ட துறைகளில் திறமையான இளைஞர்களை பணியில் சேர்க்க உள்ளது. அரசு வேலை கனவு கொண்டவர்கள், பொறியியல் மற்றும் பார்மசி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கல்வித்தகுதி, எழுத்துத் தேர்வு, நேர்காணல்
400 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கத் தேவையான கல்வித்தகுதியாக சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் B.E/B.Tech அல்லது பார்மசி டிகிரி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 40 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முறையாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். இதில் முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கே அடுத்த கட்ட நேர்காணல் வாய்ப்பு வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு ஜனவரி 11, 2026 அன்று நடைபெறவுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தயாரானால் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் ஏற்கப்படுவதால், விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் தனிப்பட்ட மற்றும் கல்வித் தகவல்களை சரியாக பதிவுசெய்து இணைப்பு ஆவணங்களையும் சேர்க்க வேண்டும்.
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம்: rites.com/Career. விண்ணப்பிக்க கடைசி நாள் 25.12.2025 என்பதால் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசு துறையில் நிலையான நல்ல சம்பளத்துடன் தொழில் வளர்ச்சி எதிர்பார்ப்பவர்கள் ரைட்ஸ் வேலைவாய்ப்பை இழக்க வேண்டாம்!

