Asianet News TamilAsianet News Tamil

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

திட்டத்தை பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும்.

50 percent subsidy for poultry farming for beginners
Author
Chennai, First Published Aug 9, 2022, 1:38 PM IST

2022- 23 ஆம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கையில் கிராமப்புற சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைக்கான மானியம் வழங்கும் திட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கான திட்டம் தான் இது.  சிறிய அளவிலான நாட்டுகோழி பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  திட்டத்தை செயல்படுத்த தேவையான கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு அதாவது தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சு பொரிப்பான் நான்கு வார குஞ்சுகள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றின் மொத்த செலவில் இருந்து 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

மானிய அளவை :
 
அதன்படி ரூ.1,66,875 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகள் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு...நீங்கள் பொறியியல் பட்டதாரியா..? 3 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?

50 percent subsidy for poultry farming for beginners

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் :

 விதவைகள், ஆதரவற்றோர் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனாளராக இருத்தல் கூடாது. அதோடு கோழி பண்ணைகளை தொடர்ந்து மூன்று வருடங்கள் குறையாமல் பராமரிப்பு உத்தரவாத கடிதம் அளிக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு...ஊராட்சி ஒன்றியத்தில் வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

கோழிபண்ணை மூலம் வருமானம் :

 நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழக முழுவதும் நல்ல சந்தை இருப்பதால் பயனாளிகளை தாங்களே சந்தைப்படுத்தலை உருவாக்க முடியும். 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை பெற முடியும்.. 2000 முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டு மீதமுள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களை இறைச்சிக்காகவும்  விற்பனை செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் வரை வருமான ஈட்ட வாய்ப்புள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...சூப்பர் அறிவிப்பு.. 8ஆவது படித்திருந்தாலே போதும்.. தமிழ்நாடு அரசு பணி.. ரூ58,000 வரை சம்பளம்..

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி :

திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அணுகி விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆவணங்களுடன் வருகிற 15/ 08 /2002-குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios