ஊராட்சி ஒன்றியத்தில் வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் கீழ் 8 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்:
அதன்படி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில்1 காலிப்பணியிடமும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும் என ஆகமொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
காலியாக வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு விண்ணப்பிக்கும் நபர் ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டதாரியாக இருக்க வேண்டும். மேலும் MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க:சூப்பர் அறிவிப்பு.. 8ஆவது படித்திருந்தாலே போதும்.. தமிழ்நாடு அரசு பணி.. ரூ58,000 வரை சம்பளம்..
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அனுபவம்:
மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு விண்ணப்பிக்கும், சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட்!! தவறவிடாதீர்கள்.. குரூப் 1 மற்றும் 2 தேர்விற்கு இலவச பயிற்சி முகாம்.. முழு விவரம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
வரும் 16 ஆம் தேதிக்குள் விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்தினை அனுப்பிருக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம் . அல்லது கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் /திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
DSMS வளாகம்,
புதுக்கோட்டை.