நீங்கள் பொறியியல் பட்டதாரியா..? 3 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?
NTPC எனும் தேசிய அனல் மின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்
பணியின் பெயர்:
director எனும் பதவிக்கு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் தேதி:
இந்த மாதம் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், 17 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் MBA/PGDBM படித்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு மாதம் ரூ.1,80,000 யிலிருந்து 3,40,000 வரை வழங்கப்படும்
வயது :
வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பத்தாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
அனுபவம்:
கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://pesb.gov.in/Home எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சென்று முகப்பில் இருக்கும் vacancies option சென்று அதில் Choose Advertised Vacancies என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
மேலும் வேலை வாய்ப்பு அறிவிப்பினை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும். Apply online என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் Login or Sign in the registered ID கொடுக்க வேண்டும். இப்பொழுது விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Smt Kimbuong Kipgen
Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.