முதலிடம் பிரியாணி.. அடுத்த இடம் எது? சோமாட்டோ & ஸ்விக்கி வெளியிட்ட புள்ளி விவரங்கள்
சோமாட்டோவில் ஒவ்வொரு வினாடியிலும் 3 பிரியாணியும், அதேபோல ஸ்விக்கியில் ஒரு வினாடிக்கு 2 பிரியாணிகளும் டெலிவரி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாட்டோவில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக சோமாட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு பிரியாணி தான். ஒவ்வொரு ஆண்டும் சொமாட்டோ தங்களது ஆண்டு அறிக்கையை வெளியிடும். தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கை வெளியாகியுள்ளது.
முதலிடம் பிடித்த பிரியாணி
அந்த அறிக்கையின்படி, 9 கோடிக்கும் மேற்பட்ட ஆர்டர்களை பிரியாணி பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் பீட்சா உள்ளது. இது சுமார் 5.8 கோடி ஆர்டர்களை பெற்றுள்ளது. இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் பிரியாணி மற்றும் பீட்சாவின் விற்பனையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளதாக சோமாட்டோ அறிக்கை தெரிவிக்கிறது.
சோமாட்டோ
சோமாட்டோவின் வெளியிட்டுள்ள கணக்கின்படி, கடந்த ஆண்டு இந்தியர்கள் 10,09,80,615 பிரியாணிகளை ஆர்டர் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு அது 9,13,99,110 ஆக குறைந்துள்ளது. ஓராண்டில் சுமார் 95 லட்சம் ஆர்டர்கள் குறைந்துள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டது போல பீட்சாவிலும் இதே நிலைதான். கடந்த ஆண்டு இந்தியர்கள் 7,45,30,036 பீட்சாக்களை ஆர்டர் செய்தனர்.
பீட்சா
இந்த ஆண்டு அது 5,84,46,908 ஆக குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் பீட்சா விற்பனை 20% குறைந்துள்ளது. இத்தாலிய உணவான பீட்சாவின் விற்பனை 1.6 கோடி குறைந்துள்ளது. சோமாட்டோவின் முக்கிய போட்டியாளரான ஸ்விக்கியும் தனது 2024ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்விக்கியிலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரியாணிதான் முதலிடத்தில் உள்ளது.
ஸ்விக்கி
ஆனால் இரண்டாம் இடத்தில் பீட்சா இல்லை. இரண்டாம் இடத்தில் இடம் பெற்றிருப்பது தோசைதான். 2024 ஆம் ஆண்டில் 2.3 கோடி ஆர்டர்களை தோசை பெற்றுள்ளது. சோமாட்டோவில் ஒவ்வொரு வினாடியிலும் 3 பிரியாணிகளும் ஸ்விக்கியில் வினாடிக்கு 2 பிரியாணிகளும் டெலிவரி செய்யப்பட்டுள்ளன என்பது இரண்டு தளங்களும் வழங்கும் புள்ளிவிவரத்தின் வழியாக தெரிய வருகிறது.
100 ரூபாய்க்கு ஹோட்டல் ரூம்.. ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்!