ரயில்வேயுடன் கைகோர்த்த சோமாட்டோ: ரயில் பயணத்திலும் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம்
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ நாட்டில் 100 ரயில் நிலையங்கில் ரயில் பெட்டிகளுக்குள்ளே சென்று உணவு டெலிவரி செய்யும வகையில் இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Zomato in Train
நாட்டில் பெரும்பாலான மக்கள் தொலைதூர பயணத்திற்கு தேர்வு செய்யும் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைகிறது. ரயில் பயணத்தை விரும்பி தேர்வு செய்யும் நிலையில், ரயிலில் விற்கப்படும் உணவு பலராலும் நிராகரிக்கப்படுகிறது. அதே வேலையில் பயணத்தின் போது உணவு கிடைக்காமல் தவித்தவர்களும் உண்டு. இப்போது இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துள்ளது. இப்போது சூடான உணவு மற்றும் சிற்றுண்டி ரயில் பெட்டியில் அமர்ந்திருக்கும் இடத்திற்கே டெலிவரி செய்யப்படும். ஆம், Zomato இப்போது ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகத்தை தொடங்கியுள்ளது.
Zomato in Train
இந்திய ரயில்வே துறையுடன் Zomato ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் Zomato உணவு சேவையை வழங்க உள்ளது. ரயில் பயணத்தின் போது ஆர்டர் செய்தால் போதும், ரயில் நிலையத்தில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். ஏற்கனவே Zomato 10 லட்சம் ஆர்டர்களை ரயிலில் டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.
Zomato in Train
ரயில் பயணிகளுக்கு டெலிவரி செய்வது குறித்து Zomato தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இப்போது Zomato ரயில் பெட்டிகளுக்கு, பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கே உணவை டெலிவரி செய்யும். இதற்கு ரயில்வே துறையுடனான வெற்றிகரமான ஒப்பந்தம் காரணமாகும். 10 லட்சம் ஆர்டர்கள் ரயிலில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அடுத்த பயணத்தில் நீங்களும் முயற்சிக்கவும் என்று தீபேந்தர் கோயல் ட்வீட் செய்துள்ளார்.
Zomato in Train
Zomatoவின் புதிய முயற்சிக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ரயிலில் உணவு தான் பெரிய பிரச்சனை. இப்போது எங்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்ய முடிகிறது என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் பலர் ரயில் பெரும்பாலும் தாமதமாகவே நிலையத்தை வந்தடைகிறது. இந்த நேரத்தில் டெலிவரி பாய் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தவிர வேறு சில சவால்களும் உள்ளன என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Zomato in Train
Zomato சமீபத்தில் தனது வணிகத்தையும், பரிவர்த்தனையையும் விரிவுபடுத்தி வருகிறது. தற்போது உணவு விநியோகத்தை ரயில் பெட்டிகளுக்கும் வழங்குகிறது. இதற்கு முன்பு Zomato, Paytm நிறுவனத்தின் டிக்கெட் புக் செய்யும் வணிக முயற்சியை வாங்கியது. ரூ.2,048 கோடிக்கு பொழுதுபோக்கு டிக்கெட் நிறுவனத்தை வாங்கியது.
Zomato உணவு விநியோக ஊழியர்களின் நெகிழ்ச்சியான செயல்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 வயது மகளை அழைத்துக்கொண்டு டெலிவரி செய்த ஊழியர், மிதிவண்டியில் உணவு விநியோகத்தில் தாமதமாக வந்த டெலிவரி பாய்க்கு வாடிக்கையாளர் அளித்த அன்பளிப்பு என பல காரணங்களால் Zomato எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்கிறது.