Asianet News TamilAsianet News Tamil

சக்தி வாய்ந்த உலகப் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்; சீனா இனி அடிபணியும்!!

ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கின்படி இந்தியா தற்போது உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை விஞ்சிவிட்டது. இல்லையென்றால் இப்படியும் சொல்லலாம். உலகிலேயே மக்கள் தொகையில் நம்பர் ஒன் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அமெரிக்க பத்திரிக்கையாளரும், பொருளாதார எழுத்தாளருமான நோவா ஸ்மித் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Worlds largest country India will emerge as world's biggest powerful economic house says blogger Noah Smith
Author
First Published Apr 29, 2023, 10:48 AM IST

மேலும் அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது: சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, மக்கள் தொகையில் உலகிலேயே இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதனால் உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் தற்போது வெளியாகும் ஒரு தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில், அதுவும் பெரிய அளவில் இந்தியா தனது இருப்பை உணர்த்தியுள்ளது. இந்தியாவும் பொருளாதார ரீதியாக உலகளாவிய சக்தியாக வளர்ந்து வருவதால், ஆன்லைன் உலகில் இந்தியாவின் வலுவான முன்னேற்றம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

இந்தியாவின் மக்கள்தொகையைப் போலவே, இந்தியாவின் பொருளாதாரமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இது தவிர, இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையமாக மாற்றும் விஷயங்கள் என்ன? நெப்போலியன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே சொன்னார், '' சீனாவை தூங்க விடுங்கள், அது எழுந்தால் அது உலகை உலுக்கும். சீனா விழித்துக்கொண்டு உலகையே அதிர வைத்தது. தற்போது பூமியின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையும் மாறிவிட்டது. சீனா உலக அரசியல் தளத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளது. அதன் மக்கள் தொகை காரணமாக, சீனா பூமியின் சூழலையும் மாற்றியுள்ளது என்று கூட சொல்லலாம். இப்போது 1.4 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியாவும் அதையே செய்யப் போகிறது. இதற்கு, நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும், முழு உலகத்தின் பார்வையும் இந்தியாவை நோக்கி மட்டுமே இருக்கும்.

இவரோட வீட்டுக்கு முன்னாடி அம்பானி வீடு கூட சுமார் தான்! உலகின் விலையுர்ந்த வீடுகள்.. உள்ளே எப்படி இருக்கும்?

இந்தியா-  சீனா மக்கள்தொகை வேறுபாடு என்ன?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு பற்றி பேசுகையில், இந்தியாவின் மக்கள் தொகை இளைஞர்களைக் கொண்டது. சீனாவின் மக்கள்தொகையின் சராசரி வயது 30 முதல் 60 ஆண்டுகள் என்றும், இந்தியாவின் சராசரி மக்கள் தொகை 0-40 வயது வரை என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவுக்கு கூடுதல் வலு சேர்க்கும். இது சீனாவை விட இந்தியாவை முன்னோக்க வைக்கிறது. இந்திய மக்கள் எப்போது உலகப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பார்கள் என்றால், அதற்கான தருணம் நெருங்கி வருகிறது. சில காலத்திற்கு முன்பு சீனா இருந்த நிலையை இந்தியா தற்போது அடைந்துள்ளது. இந்தியா ஏற்கனவே உள்ளது. ஆனால் உலகம் அதை புறக்கணித்தது. ஆனால் இனி அது நடக்காது.


இந்தியாவின் வளர்ச்சி உண்மையில் கவனிக்கத்தக்கது:

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமும் சீனாவை பின்னுக்கு தள்ள ஆரம்பித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியா தனது பொருளாதார முன்னேற்றத்தை துரிதப்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில், சீனா 10 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த 7 சதவீத வளர்ச்சி வாழ்க்கைத் தரத்தையும் உள்ளடக்கியது. 12 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்த நிலையை, இந்தியா 2019ல் அடைந்துள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது இது நடந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பற்றி பேசுகையில், 2007 இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு பெரிய விஷயமாக இருந்தது. 2023 இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவாதத்திற்குரிய விஷயமாகி உள்ளது. மிக மோசமான வறுமையில் இருந்து இந்தியா வெளியேறி, இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது வறுமையை பெருமளவு சமாளிக்கும் என்று 2018 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. கொரோனா தொற்று பரவி இருந்தாலும், வறுமையை ஒழிப்பதில் இந்தியா வெற்றி பெற்ற விதம் ஆச்சரியமளிக்கிறது. 

சிங்கப்பூரில் சொத்து வாங்கும் இந்தியர்களுக்கு நெருக்கடி; என்ன காரணம்?

ராணுவ பலம்:
இந்தியாவின் பொருளாதார எழுச்சி உலக அரங்கில் அதிக ராணுவ பலத்தையும், புவிசார் அரசியல் செல்வாக்கையும் கொடுக்கும். இது இன்னும் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார "துருவங்களில்" ஒன்றாக இல்லை. ஆனாலும், தொடர்ந்து அடுத்த பத்தாண்டுகளுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி வந்தால், இந்தியாவை யாராலும் எளிதாக அசைக்க முடியாது.  உலக வாழ்வாதாரத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமான இடமாக மாறும். மேலும் இந்தியா கலாச்சார இணையமாக இருக்கிறது.

ஆன்லைன்:
இந்த விஷயத்தில் சீனாவை விட இந்தியா மிக முக்கியமானதாக இருக்கும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆன்லைனில் கொண்டு வந்தபோது, ​​சீனா உலகளாவிய இணையத்தை கையகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. தனது மக்களை வெளியறவு மக்களுடனான தொடர்பை சீனா துண்டிக்கிறது. இதன் விளைவாக, சீனா பெரிய அளவில், ஒரு அமைதியான வல்லரசாக உள்ளது. வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான நாடாக சீனா இருந்தாலும்,  அந்த நாட்டில் என்ன நடக்கிறது, மக்கள் எப்படிப்பட்டவர்கள் போன்ற உணர்வுகள் மற்ற நாட்டினருக்கு பெரிய அளவில் தெரிவதில்லை. அமெரிக்காவை விட மூன்று மடங்கு இந்தியர்கள் ஆன்லைன் பயன்படுத்தி வருகின்றனர். நடப்பாண்டின் கணக்கின்படி, 750 மில்லியன் இந்தியர்கள் ஆன்லைன் பயன்படுத்தி வருகின்றனர்.

கட்டமைப்பு:
இந்தியா பெரிய அளவில் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. சாலைகள் அமைப்பது, விமான நிலைய விரிவாக்கம், ரயில் போக்குவரத்து விரிவாக்கம் என்று துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதேசமயம் இந்தியா கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும். இதை அடையும்பட்சத்தில் இந்தியாவை யாராலும் பின்னுக்கு தள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios