MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இவரோட வீட்டுக்கு முன்னாடி அம்பானி வீடு கூட சுமார் தான்! உலகின் விலையுர்ந்த வீடுகள்.. உள்ளே எப்படி இருக்கும்?

இவரோட வீட்டுக்கு முன்னாடி அம்பானி வீடு கூட சுமார் தான்! உலகின் விலையுர்ந்த வீடுகள்.. உள்ளே எப்படி இருக்கும்?

இந்தியாவில் அமைந்துள்ள விலையுர்ந்த வீடுகளை பற்றி தெரியுமா? உலகின் குறிப்பிடத்தகுந்த பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் அன்டீலியா முதல் ஜேகே ஹவுஸ் வரை முழு விவரங்கள்.. 

2 Min read
Author : maria pani
Published : Apr 28 2023, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியாவில் 140 பணக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உலக பணக்காரர்கள் பட்டியலை குறித்து பேசினால், அதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் பெயர் அதில் தவறாமல் இடம்பெறும். அவருக்கு ஒன்றல்ல இரண்டல்ல.. பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளன. 

24

இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய கண்டத்திலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது தான். அவருக்கு சொந்தமான மும்பையில் உள்ள அன்டீலியா வீடு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது. அம்பானியின் அன்டீலியா வீடு 27 அடுக்குகள் கொண்டது. இங்கு முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் உள்ள 27 தளங்களில், 6 தளங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ஜே.கே ஹவுஸ் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

34

கவுதம் சிங்கானியாவின் ஜே.கே ஹவுஸ் விலை உயர்ந்த வீடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பையில் அமைந்துள்ள இந்த 30 மாடி கட்டிடத்தில் ரேமண்ட் குழுமத்தின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதன் விலை 6 ஆயிரம் கோடி ரூபாய். இவர்களது வீட்டில் நீச்சல் குளம், ஸ்பா, ஹெலிபேட் போன்ற எல்லா வசதிகளும் உள்ளன. 

44

விலை உயர்ந்த வீடுகளின் பட்டியலில் அம்பானி குடும்பத்தின் மற்றொரு வீடு மூன்றாம் இடத்தை பிடிக்கிறது. முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானியின் வீடு, அம்பானியின் வீட்டிற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. இவரும் மும்பையில் ஒரு ஆடம்பர வீட்டை வைத்துள்ளார். இதன் மதிப்பு 5,000 கோடி ரூபாய் ஆகும். இது 17 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட வீடு. 

இதையும் படிங்க: கோஹினூர் வைரத்தை பிரிட்டன் ராணி கமிலா தன் கிரீடத்தில் ஏன் அணியவில்லை தெரியுமா? அதன் விலை என்ன! இது தான் காரணம்

இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த வீட்டு சைரஸ் பூனாவாலாவின் வீடு. தடுப்பூசி மன்னன் என்று அழைக்கப்படும் சைரஸ் பூனாவாலாவின் லிங்கன் மாளிகையின் மதிப்பு சுமார் 750 கோடி ரூபாய் ஆகும். 

இதையும் படிங்க: அடேங்கப்பா! இத்தனை லட்சத்துக்கு புடவையா? நீதா அம்பானி உடுத்திய உலகின் விலையுயர்ந்த புடவை.! அப்படி என்ன சிறப்பு

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved