Asianet News TamilAsianet News Tamil

ETF என்றால் என்ன ? மியூச்சுவல் ஃபண்ட் Vs இ.டி.எஃப்.. எது சிறந்தது ? முழு தகவல்கள்

இ.டி.எஃப் (ETF) என்பது நிறுவனப் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் அல்லது தங்கம் இவற்றை அடிப்படையாக கொண்டு, பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் திட்டமாகும்.

 

What is an ETF Exchange Traded Fund Full details
Author
First Published Jul 31, 2022, 3:49 PM IST

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தாலும், பங்குச் சந்தை வாயிலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாது. ஆனால், ETF (Exchange Traded Fund) திட்டங்களை பங்குச் சந்தைகளில் வாங்கவும், விற்கவும் முடியும். இண்டக்ஸ் நிதிகளை காட்டிலும் ETF திட்டங்களுக்கான பரிவர்த்தனை செலவும் குறைவு, சாதாரண ஓப்பன் எண்டட் ஈக்விட்டி ஃபண்டை போன்று அவற்றை வாங்கவும் விற்கவும் முடியாது. 

What is an ETF Exchange Traded Fund Full details

ஒரு முதலீட்டாளர், எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி சந்தையின் மூலம், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான யூனிட்களை வாங்க முடியும். பங்கு சந்தையில் ரிஸ்க் எடுக்க விரும்பத்தவர்களுக்கு ETF நிதியில் முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியும் என்று தேசிய பங்குச் சந்தை கூறுகிறது. குறுகிய கால முதலீடு, நீண்டகால முதலீடு என எல்லா தரப்பு முதலீட்டாளர்களும் ETF நிதியில் முதலீடு செய்யலாம். ETF  திட்டங்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..5g spectrum auction:கல்லாகட்டும் மத்திய அரசு! 5ஜி அலைக்கற்றை 2ம் நாள் ஏலத்தில் ரூ.1.49 லட்சம் கோடி குவிந்தது

ஆரம்பகட்ட முதலீடு குறைவு என்பதால் சாதாரண முதலீட்டாளர்களும் ஈசியாக ETF திட்டங்களை வாங்கவும், விற்கவும் முடியும். ETF திட்டங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால் விநியோக செலவும் குறைவு. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்; ஆனால் ரிஸ்க் வேண்டாம் என கருதுபவர்களுக்கு ETF ஒரு நல்ல சாய்ஸ்.நேரடி பங்கு சந்தையில் டிமேட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் அந்த நேரத்தின் விலையில் இ.டி.எஃப்களை வாங்க முடியும். 

What is an ETF Exchange Traded Fund Full details

இண்டெக்ஸின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வருவாய் கிடைக்கும்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட நேரடி இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு கட்டணம் குறைவாக செலுத்தினால் போதும். ஆனால் பங்குச் சந்தை முதலீடு என்பது சந்தை அபாயத்திற்கு என்றுமே உட்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..itr filing date: ஐடி ரிட்டன் தாக்கலுக்கு 31ம்தேதி கடைசி: தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios