வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்துவரும் நிலையில் அந்நிறுவனம் 2 பில்லியன் டாலர் நிதியை விரைவாகத் திரட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் கடந்த 8 வர்த்தக நாட்களில் மட்டும் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஏற்கெனவே நடப்பு ஆண்டில் வேதாந்தா பங்குகளின் விலை 15.19 சதவீதம் குறைந்துவிட்டது. பிப்ரவரியில் மட்டுமே 18.26 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் மேலும் 6.58 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.268.45 ஆக உள்ளது. தொடர்ந்து எட்டாவது நாளாக வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் விலை இறங்குமுகமாகவே முடிந்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட சரிவுக்குப் பின் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவு இது.

Bank Holidays March 2023: வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை| மார்ச்சில் எந்த நாட்களில் வங்கி இயங்காது தெரியுமா?

இந்நிலையில் எஸ் & பி குளோபல் ரேட்டிங் அறிக்கையில், அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் கடனை அடைக்க 2 பில்லியன் டாலர் நிதியைத் திரட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிதியைத் திரட்ட முடியாதபோது அந்நிறுவனம் தனது சர்வதேச ஜிங்க் சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படும்.

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் 20 வருடத்திற்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்டது. இருப்பினும் அதில் 29.54 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளன. வேதாந்தா நிறுவனம் நிதி நிரட்டவேண்டிய தேவை முன்னிட்டு தனது சர்வதேச ஜிங்க் சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கே 3 பில்லியன் டாலருக்கு விலைக்கு விற்கலாம் என்று திட்டமிடுகிறது. ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் பங்கு வைத்துள்ள மத்திய அரசு அதனை ஏற்கத் தயாராக இல்லை.

Supreme Court: இந்து மதம் ஒரு வாழ்க்கைத் தத்துவம்; அது மதவெறியை அனுமதிப்பதில்லை - உச்ச நீதிமன்றம்

கடந்த ஜனவரியில் டிவிடெண்ட் வெளியிட்டீன் மூலம் மார்ச் மாதம் வரைக்குமான நிதி ஆதாரம் வேதாந்தா குழுமத்திடம் உள்ளது. ஆனால் அதற்குப் பின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 15 மில்லியன் டாலர் மட்டுமே கடன் முதிர்வுத் தொகையாக கிடைக்க உள்ளது. இதனால் வரும் ஜூன் மாதத்துக்கு உள்ளாகவே 300 மில்லியன் டாலர் நிதியை திரட்டவேண்டும்.

மேலும் இதே கால வரம்புக்குள் இரு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முறையே 300 மற்றும் 350 மில்லியன் டாலர் தொகை தேவைப்படுகிறது. இந்த நிதியைத் திரட்ட முடியாமல் போனால், இருக்கும் நிதியை வைத்து இந்தக் கடன்களை செலுத்த முடியும். ஆனால், முடிவில் நிறுவனத்தின் மொத்த கையிருப்புத் தொகை வெறும் 500 மில்லியன் டாலராகச் வற்றிவிடும்.

March 1: மார்ச் 1 முதல் வரவுள்ள மாற்றங்கள்: கடன் காஸ்ட்லியாகும்! சாமானியர்களை பாதிக்குமா?