பிப்ரவரி மாதம் நாளையுடன் முடிகிறது. ஏராளமான புதிய விதிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் வருவதால், அதனால் உங்கள் வாழ்வில் தாக்கத்தைஏற்படுத்தலாம்.
பிப்ரவரி மாதம் நாளையுடன் முடிகிறது. ஏராளமான புதிய விதிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் வருவதால், அதனால் உங்கள் வாழ்வில் தாக்கத்தைஏற்படுத்தலாம்.
சமூக வலைதளம், வங்கிக்கடன், எல்பிஜி கேஸ் விலை, உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மார்ச் 1ஆம் தேதி வரவுள்ளன. இது குறித்துப் பார்க்கலாம்
வங்கிக்கடன் காஸ்ட்லியாகும்
ரிசர்வ் வங்கி இந்த மாதம் நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டியை 25 புள்ளிகள் உயர்த்தியதால், வட்டி 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்னும் பெரும்பாலான வங்கிகள் இந்த வட்டி உயர்வை அமல்படுத்தவில்லை. மார்ச் 1ம்தேதிமுதல் பல வங்கிகள் அமல்படுத்தி அறிவிப்பு வெளியிடும் என்பதால், வங்கியில் கடன் வாங்குவதும் காஸ்ட்லியாகும். மாத இஎம்ஐ செலுத்துவோர் அதிக தொகை செலுத்த வேண்டியதிருக்கும். சராசரி மனிதர்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும்.

எல்பிஜி மற்றும் சின்என்சிஜி கேஸ்விலை
எல்பிஜி கேஸ், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி கேஸ் விலை ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் விலையை மாற்றி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கும். அந்த வகையில் வீட்டுக்கு பயன்படும் சமையல் சிலிண்டர் விலை இன்னும் மாற்றப்படவில்லை. இந்தமுறை மாற்றப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில் நேரம் மாற்றம்
அடுத்துவரும் கோடை காலத்துக்கு ஏற்பட இந்திய ரயில்வே ரயில் புறப்படும், வந்து சேரும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றங்களை மார்ச்மாதம் வெளியிடும். ரயில்வே வட்டாரங்கள் தகவலின்படி 5ஆயிரம் சரக்கு ரயில் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் நேரம் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது

சமூக வலைதள விதிகள் மாற்றம்
மத்திய அரசு சமீபத்தில் தகவல்தொழில்நுட்ப விதிகளில் மாற்றம் செய்தது. சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவை இந்திய விதிகளுக்கு இனிமேல் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மத உணர்வுகளை தூண்டும் பதிவுகளுக்கு கட்டுப்பாடு இருக்கும் எனத் தெரிகிறது. இந்த விதிகள் மார்ச் முதல் அமலுக்கு வருகிறது. தவறான பதிவுகளை இடும் பயனர்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம்

வங்கி விடுமுறை
மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை வருகிறது. ஹோலி, நவ்ராத்ரி வார விடுமுறை நாட்கள் சேர்த்து 12 நாட்கள் வருவதால், அதற்குஏற்றார்போல் மக்கள் தங்கள் வங்கிப்பணிகளை திட்டமிட வேண்டும்.
