கடந்த 2013ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 4 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பை ரூ.69லிருந்து ரூ.58 ஆக வலுப்படுத்தினோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 4 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பை ரூ.69லிருந்து ரூ.58 ஆக வலுப்படுத்தினோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போருக்குப்பின் இந்திய ரூபாய் மதிப்பு பிப்ரவரி மாதத்திலிருந்து கடும் நெருக்கடிக்கு ஆளாகிவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் வலுப்பெறுவதால் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம், ஆகியவற்றால், ரூபாய் மதிப்பு மோசமாகச் சரிந்து வருகிறது. 2022ம் ஆண்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 6.9 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 0.8 சதவீதம் மதிப்பு குறைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு நேற்றுமுன்தினம் வர்த்தகம் முடியும் போது ஏறக்குறைய 80 ரூபாயை நெருங்கி ரூ.79.99 என வந்துவிட்டது. ஆனால், 80 ரூபாயைத் தொடவில்லை. ஆனால், ஓரளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது.
இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது, இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், மத்திய அரசு மவுனமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் ரூபாய் மதிப்பு சரிவு குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஷிண்டே நேற்று அளித்த பேட்டியில் கடந்த 2013ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ரூபாய் மதிப்பு ரூ.69ஆகச் சரிந்தது
ஆ னால், காங்கிரஸ் அரசு 4 மாதங்களில் ரூபாய் மதிப்பை ரூ.58ஆக உயர்த்தியது. நாட்டின் ஜிடிபியும் 5.1 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்ந்தது.இவை அனைத்தையும் சமீபத்திய வரலாற்றுக்கு மேல் இருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவைக் கட்டுப்படுத்த, தடுக்க பாஜக அரசு விருப்பமில்லாமல், வெறுப்புடன் இருக்கிறது
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
