ஜிடிபி முதல் ஸ்டார்ட்அப் வரை! 10 வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட இந்தியப் பொருளாதாரம்!
UPA vs NDA 10 year comparison: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு ஆட்சியில், இந்தியா பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நிய நேரடி முதலீடு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நெடுஞ்சாலைகள் என பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்குப் பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகள் ஆகிறது. இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் அதே வேளையில், நாட்டின் டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் அதிவேகமாக வளர்ந்துள்ளன. யுபிஏ ஆட்சிக்கு பிறகு என்டிஏ அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு தசாப்தத்திற்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்று பார்ப்போம்.
பொருளாதார வளர்ச்சி:
மொத்து உள்நாட்டு உற்பத்தி (GDP): UPA ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. NDA ஆட்சியின் கீழ் 5வது இடத்திற்கு சென்றது. IMF தரவுகளின்படி, இந்தியா தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்டா நாடாக உள்ளது.
அன்னிய நேரடி முதலீடு (FDI): ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2004-14ல் (யுபிஏ) 305 பில்லியன் டாலரிலிருந்து 2014-24ல் (என்டிஏ) 667 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
பணவீக்கம் : சராசரி பணவீக்கம் 2004-14 (யுபிஏ) காலத்தில் 8.19% ஆக இருந்து 2014-24ல் (NDA) 5.56% ஆக குறைந்துள்ளது. சிபிஐ பணவீக்கம் 2013ல் 10.08 சதவீதமாக இருந்தது, தற்போது 4.9 சதவீதமாக உள்ளது.
மூலதனச் செலவு: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலதனச் செலவினம் 2014 நிதியாண்டில் (UPA) 1.7% லிருந்து 2024 நிதியாண்டில் (NDA) இல் 3.2% ஆக அதிகரித்துள்ளது.
மறைமுக வரி விகிதம்: மறைமுக வரி விகிதம் 15% (ஜிஎஸ்டிக்கு முன்) இருந்து 12.2% ஆகக் குறைக்கப்பட்டது (மார்ச் 2023 இல் ஜிஎஸ்டி).
ஸ்டார்ட்அப்கள்: 2014ல் நாட்டில் 350 ஸ்டார்ட்அப்கள் இருந்தன. ஆனால் தற்போது அது 1,40,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தகவல் ஜூன் 2024 வரை இருக்கும்.
குளோபல் இன்னோவேஷன் இன்டெக்ஸ்: 2015ல் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. ஆனால் 2024ல் 39வது இடத்தை எட்டியது.
காப்புரிமைகள்: 2004-15ல் நாட்டில் 5978 காப்புரிமைகள் இருந்தன. இது 2014-24ல் 1,03,057 ஆக அதிகரித்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு
மின் உற்பத்தி திறன்: மொத்த மின் உற்பத்தி திறன் மார்ச் 2014 இல் (யுபிஏ) 249 GW லிருந்து நவம்பர் 2024 இல் (என்டிஏ) 456 GW ஆக அதிகரித்துள்ளது.
மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 2014ல் (யுபிஏ) 5ல் இருந்து 2024ல் (என்டிஏ) 25 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள்: தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 2004-14ல் (யுபிஏ) 25.7 ஆயிரம் கிமீ ஆக இருந்தது. 2014-24ல் (என்டிஏ) 54.9 ஆயிரம் கிமீ ஆக அதிகரித்துள்ளது. முன்பு தினமும் 11.6 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 34 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலையங்கள்: 2014 வரை நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இது 2024 இல் 157 ஆக அதிகரித்துள்ளது.
மின்மயமாக்கப்பட்ட ரயில் நெட்வொர்க்: 2014 (யுபிஏ) க்கு முன்பு 21,801 கிமீ தொலைவில் இருந்த ரயில் வலையமைப்பு 2014-24ல் (என்டிஏ) 44,199 கிமீ ஆக அதிகரித்தது.