மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. புதிய சலுகைகள் கிடைக்குமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளான நேற்று இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இது புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும.
இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பின் ஆட்சியமைக்கும் புதிய அரசு ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவுப்புகள் சலுகைகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
குறிப்பாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், எரிபொருள் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூற்பபடுகிறது. இது இடைக்கால பட்ஜெட் என்பதால், பெரிய கொள்கை மாற்றங்கள் அல்லது பெரிய அறிவிப்புகள் இல்லாமலும் இருக்கலாம்., ஆனால் மக்களவை தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன.
6-வது முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர்
இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் 2-வது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இதன் மூலம் மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்களின் சாதனைகளை முறியடிக்க உள்ளார். முன்னாள் மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்த காலத்தில், 1959 மற்றும் 1964 க்கு இடையில் ஐந்து ஆண்டு பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்..
பட்ஜெட் 2024: மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?
பாரம்பரிய சூட்கேஸுக்கு பதில் சிவப்பு நிற பை
2019 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மோடி 2.0 அரசாங்கத்தில், நிர்மலா சீதாராமனுக்கு நிதித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. 1970-71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இந்திரா காந்திக்குப் பிறகு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிர்மலா பெற்றார். 2019ஆண்டு நிர்மலா சீதாராமன் முதன்முறையாக சூட்கேஸுக்கு பதில், தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற பையில் பட்ஜெட் உரை மற்றும் பிற ஆவணங்களை எடுத்துச் சென்றார். மேலும் 2021-ம் ஆண்டு டேப்லெட்டை பயன்படுத்தி முதல் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Budget of Union
- Nirmala sitharaman
- Union Assembly Budget Session 2024-24
- Union Budget 2024
- Union Budget 2024 News
- Union Budget 2024 analysis
- Union Budget 2024-24 Union Budget expectations 2024
- Union Budget 2024-24 pdf
- Union Budget Latest News
- Union Budget live
- Union Budget session 2024
- Union Finance minister
- Union State Budget 2024
- union finance minister nirmala sitharaman
- Interim Budget 2024