Asianet News TamilAsianet News Tamil

UIDAI Aadhaar Update: ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் முடிந்ததா?மத்திய அரசு புதிய அறிவிப்பு

ஆதாரில் மோசடிகளைத் தவிர்க்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு புதிய உத்தரவு  பிறப்பித்துள்ளது.

UIDAI AAdhar Update: Every ten years, the Aadhaar card must be updated: centre! Here are the guidelines
Author
First Published Nov 10, 2022, 3:30 PM IST

ஆதாரில் மோசடிகளைத் தவிர்க்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு புதிய உத்தரவு  பிறப்பித்துள்ளது.

ஆதார் எண் பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், வீட்டு முகவரி, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஏதாவது துணை ஆதாரங்கள் மூலம் கார்டை புதுப்பித்துக்கொள்வது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு(Demonetisation)! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

UIDAI AAdhar Update: Every ten years, the Aadhaar card must be updated: centre! Here are the guidelines

ஆதார் எண் பதிவுசெய்யப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் அனைவரும் சுய விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இந்த உத்தரவும் உடனுக்குடன் அமலுக்கு வந்துள்ளது. 

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை,  மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில் “ ஆதார் எண் வைத்திருப்பவர்கள், பதிவுசெய்யப்பட்ட தேதி முடிந்து ஒவ்வொரு 10 ஆண்டுகள் நிறைவடைந்தபின், தங்களின் பிற ஆதார சான்றுகளான அடையாள சான்று, வசிப்பிடச் சான்று ஆகியவற்றை வைத்து ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் சுயவிவரங்களை தொடர்ந்து துல்லியமாகவும், உயிர்ப்புடனும் வைத்திருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மெட்டா நிறுவனம் ‘மெகா ஆட்குறைப்பை’ இன்று தொடங்குகிறது

சில மாதங்களுக்கு முன் ஆதார் வழங்கும் யுஐடிஏஐ(UIDAI) அமைப்பு, ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. இப்போது மத்திய அரசு, ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. 

மத்திய அரசின் 315 சலுகைகளையும், மாநில அரசுகளின் 635 சலுகைகள், திட்டங்களைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகியுள்ளது. ஆதலால், அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பது அவசியம். அதாவது ஆதார் அட்டைதாரர்கள் செல்போன் எண்ணை மாற்றியிருந்தாலோ அல்லது முகவரியை மாற்றியிருந்தாலோ அதை புதுப்பிக்கலாம். 

ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் முடிந்தவர்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள், ஆன்-லைன் மூலமோ அல்லது மை ஆதார் போர்டல் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம். இல்லாவிட்டால் ஆதார் பதிவு மையம் அல்லது பொதுச்சேவை மையத்தில் புதுப்பிக்கலாம். அஞ்சல ஊழியரிடம் ரூ.50 செலுத்தினால் ஆதார் விவரங்கள் வீட்டிற்கே வந்து புதுப்பிக்கப்படும்.

UIDAI AAdhar Update: Every ten years, the Aadhaar card must be updated: centre! Here are the guidelines

11ஆயிரம் பேர் நீக்கம்! ஹெச்1பி விசாவில் வந்து வேலையிழந்தவர்களுக்கு உதவுகிறது மெட்டா

அது மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் அடுத்த சில மாதங்களில் அமலாகும். 

இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எத்தனை பேர் ஆதார் விவரங்களை புதுப்பித்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை.கடந்த ஆண்டு 16 கோடி ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டன


 

Follow Us:
Download App:
  • android
  • ios