Asianet News TamilAsianet News Tamil

Toyota Hilux price : இந்தியாவில் பிக்கப்-டிரக் அறிமுகம் செய்யும் டொயோட்டா

டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Toyota Hilux to launch in India tomorrow Price expectation
Author
Tamil Nadu, First Published Jan 19, 2022, 2:59 PM IST

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை நாளை (ஜனவரி 20) அறிமுகம் செய்ய இருக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை ரூ. 1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவில் புதிய ஹிலக்ஸ் மாடலின் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்குகிறது.

புதிய மாடல் CKD (Completely Knocked down) வடிவில் இந்தியா கொண்டு வரப்படுகிறது. இங்கு டொயோட்டாவின் பிடாடி ஆலையில் ஹிலக்ஸ் மாடல் அசெம்பில் செய்யப்படுகிறது. இந்த மாடலில் ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களில் வழங்கப்பட்ட பாகங்களும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் புதிய டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 25 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் ஃபார்ச்சூனர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 பி.ஹெச்.பி. திறன், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. ஹிலக்ஸ் மாடல் 4WD ஆப்ஷன் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

Toyota Hilux to launch in India tomorrow Price expectation

இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ஹிலக்ஸ் மாடல்- பியல் வைட், சூப்பர் வைட், எமிரால்டு ரெட், மெட்டாலிக் கிரே மற்றும் மெட்டாலிக் சில்வர் என ஐந்து விதமான நிறங்களில்  கிடைக்கும் என தெரிகிறது. இந்த மாடல் டொயோட்டா நிறுவனத்தின் IMV-2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் பிரபல மாடல்களான ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா போன்ற மாடல்களும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளன.

அளவில் புதிய ஹிலக்ஸ் மாடல் 5,325mm நீளமாகவும், 1855mm அகலமும், 1,865mm உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3,085mm ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 216mm அளவில் இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலின் பெரும்பாலான உள்புற அம்சங்கள் ஃபார்ச்சூனர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இதில் 8 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அடஜஸ்ட் செய்யும் வசதியுடன் டிரைவர் சீட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகன்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios