காக்னிசன்ட் நிறுவனம் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்றுள்ள ரவிக்குமார் தொழிலதிபர் முகேஷ் அம்பானியை விட அதிக சம்பளம் பெற இருக்கிறார்.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரவிக்குமார் இப்போது காக்னிசன்ட் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இணைந்துள்ளார்.

ரவிக்குமாருக்கு உதவும் வகையில், இவருக்கு முன் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பிரையன் ஹம்ப்ரிஸ் மார்ச் 15ஆம் தேதிவரை ஆலோசகர் பொறுப்பில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்னிசன்ட் நிறுவனம் ரவிக்குமாருக்கு ஆண்டுக்கு 57 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவன தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த 2020 வரை பெற்றுவந்த ரூ.15 கோடியைவிட நான்கு மடங்கு அதிகம்.

Share Market Today: காளை முதுகில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் ஜோர்! 18,000 புள்ளிகளில் நிப்டி: HUL லாபம்

மலைக்க வைக்கும் அளவு மிகப்பெரிய சம்பளத் தொகை கிடைப்பது மட்டுமின்றி, பணியில் சேரும்போதே ரவிக்குமாருக்கு போனஸ் தொகையாக 7.5 லட்சம் டாலர், அதாவது 6 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் ரவிக்குமார் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியைவிட அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.