ரூ.14 கோடி மதிப்புள்ள இந்தியாவின் விலையுயர்ந்த காரை வைத்திருக்கும் தொழிலதிபர்.. ஆனா அம்பானி, அதானி இல்ல..

இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார் பிரிட்டிஷ் பயாலஜிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.எஸ்.ரெட்டிக்கு சொந்தமானது.

The businessman owns India's most expensive car worth Rs 14 crore.. But not Ambani, Adani.. Rya

முகேஷ் அம்பானி மற்றும் ஆதார் பூனாவல்லா உட்பட இந்தியாவில் உள்ள பல பெரும் பணக்காரர்கள் ஆட்டோமொபைல் மீது பேரார்வம் கொண்டுள்ளனர். மிகவும் விலையுயர்ந்த வாகனங்கள், வீடுகள் மற்றும் பிற பொருட்களை சொந்தமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனர், முகேஷ் அம்பானி, இந்தியாவில் விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு பங்களாவுக்கு சொந்தக்காரர், ஆனால் இந்தியாவின் விலை உயர்ந்த கார் அவரிடம் இல்லை.. ஆம்.. உண்மை தான்.. இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார் பிரிட்டிஷ் பயாலஜிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.எஸ்.ரெட்டிக்கு சொந்தமானது.

பிரிட்டிஷ் வாகன உற்பத்தி நிறுவனமான பென்ட்லி உயர்தர வாகனங்களை தயாரிப்பதில் பிரபலமாக உள்ளது. மேலும் இந்த பிராண்ட் உலகம் முழுவதும் பலரால் விரும்பப்படுகிறது. தற்போது, Bentley Mulsanne EWB பதிப்பானது இந்தியாவின் விலையுயர்ந்த சொகுசு வாகனமாக உள்ளது என கருதப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.14 கோடி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வி.எஸ். ரெட்டி இந்த தனித்துவமான வரையறுக்கப்பட்ட பதிப்பு காரின் உரிமையாளராக இருக்கிறார். பென்ட்லி நிறுனத்தின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த மாடல் மிகவும் வரையறுக்கப்பட்ட பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த பிராண்ட் மிக குறைவான அளவிலேயே இந்த கார்களை உற்பத்தி செய்துள்ளது. அதாவது  உலகம் முழுவதும் 100 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 506 குதிரைத்திறன் மற்றும் 1020 Nm முறுக்குவிசை கொண்ட 6.75-லிட்டர் V8 இன்ஜின் இந்த சொகுசு சக்தி அளிக்கிறது. மேலும் 8-ஸ்பீடு ZF தானியங்கி கியர்பாக்ஸ் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது 5.5 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 296 கிமீ ஆகும்.

ரூ. 3,18,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தும் இந்திய பெண்.. உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்..

பெங்களூருவை சேர்ந்த விஎஸ் ரெட்டி பிரிட்டிஷ் பயாலஜிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை ருவாக்கியவர். இவர் உயர்தர ஆடம்பர கார்களின் ரசிகர். நாட்டில் உள்ள ஒவ்வொரு பிராண்டையும் சொந்தமாக்குவதே தனது குழந்தைப் பருவ இலக்காக இருந்தது என்று அவர் ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார். தனது Bentley Mulsanne EWB ஆடம்பர காரை தனது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளார்.

பிரிட்டிஷ் பயாலஜிக்கல் நிறுவனம் பல்வேறு வயதினருக்கு நியாயமான விலையில் தடுப்பு ஊட்டச்சத்து மருந்துகளை வழங்குவதற்காக வி எஸ் ரெட்டியால் நிறுவப்பட்டது. இது ஆராய்ச்சியின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சுகாதார துணை நிறுவனமாகும். குழந்தைகள், நீரிழிவு, மகளிர் மருத்துவம், இருதய, ஹெபடைடிஸ் மற்றும் முதியோர் மருத்துவ ஊட்டச்சத்துக்கான மருந்துகளை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios