Asianet News TamilAsianet News Tamil

பிரீமியம் எலெக்ட்ரிக் கார் வெளியீடு - திடீரென திட்டத்தை மாற்றிய டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் அல்ட்ரோஸ் இ.வி. மாடலின் இந்திய வெளியீட்டு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Tata Altroz EV India Launch Delayed Due To Changing Customer Expectations
Author
Tamil Nadu, First Published Jan 22, 2022, 8:45 AM IST

டாடா அல்ட்ரோஸ் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கடந்த ஆண்டு துவக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தது. கொரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த மாடலின் வெளியீடு பலமுறை தாமதமாகி வந்தது. இன்று வரை இதன் வெளியீடு கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், அல்ட்ரோஸ் இ.வி. மாடல் வெளியீடு தாமதமாவத்தற்கான காரணங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவு மற்றும் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாடல் எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்ற விவரங்களையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

"2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டாடா அல்ட்ரோஸ் இ.வி. மீது நாங்கள் குறிப்பிடத்தக்க கான்செப்ட் ஒன்றை திட்டமிட்டு இருந்தோம். எனினும், காலப்போக்கில் இதன் வெளியீட்டுக்கு சரியான நேரம் இது இல்லை என்பதை புரிந்து கொண்டோம். இதனாலேயே இந்த மாடலின் வெளியீடு தாமதமாகி வருகிறது," என அவர் தெரிவித்துள்ளார். 

Tata Altroz EV India Launch Delayed Due To Changing Customer Expectations

மேலும், "இரண்டு ஆண்டுகளில் நாங்கள் எப்போது வேண்டுமானாலும், இதனை அறிமுகப்படுத்தி இருக்கலாம். எனினும் பல விஷயங்கள் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டன. மேலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் மாறி இருக்கிறது. இதனால் சந்தையில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப, சரியான நேரத்தில் இந்த மாடலை அறிமுகம் செய்வோம்," என தெரிவித்தார். 

தற்போது டாடா நெக்சான் இ.வி. மற்றும் டாடா டிகோர் இ.வி. என இரண்டு மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன பிரிவில் விற்பனை செய்து வருகிறது. சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் அல்ட்ரோஸ் இ.வி. மாடல் முற்றிலும் புதிய ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் பவர்டிரெயின் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த மாடலின் தொழில்நுட்ப அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பம் முழு சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் லித்தியம் அயன் பேட்டரி, IP-67 தர சான்று மற்றும் எட்டு வருடங்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios