share market today :இந்தியப் பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்முன் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியப் பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்முன் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைக்கு கடந்த வாரம் மோசமானதாக இருந்தது. கடந்த வாரத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு ரூ.18 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு இந்தியப் பங்குச்சந்தையைப் புரட்டிப்போட்டது. இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சில முக்கியக்காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அமெரிக்க சந்தை நிலவரம்
அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த வெள்ளிக்கிழமை சிறிய உயர்வுடன் முடிந்தது. இருப்பினும் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரலாம் என்ற அறிவிப்பு முதலீட்டாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது. டோ ஜோன்ஸ் 38 புள்ளிகள் சரிந்தது, நாஷ்டாக் 152 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க சந்தை நிலவரமும் இந்தியச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்
ஆசியச் சந்தைகள்
அமெரி்க்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, பெடரல் வங்கி வட்டியை உயர்த்தியது ஆசியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து சரிவை ஏற்படுத்தியது. இன்று காலையும் ஆசியப் பங்குச்சந்தையில் ஊசலாட்டமான போக்கு நிலவுகிறது.

அமெரிக்காவில் மந்தநிலை
அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் மந்தநிலைக்குச் செல்ல 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக பேங்க் ஆஃப் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த நிதியாண்டின் 2-வது பிற்பகுதியில் பொருளாதாரவளர்ச்சி இருக்காது 2024ம் ஆண்டில்தான் பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும். இதை பெடரல் வங்கியும் உறுதி செய்திருக்கிறது. இந்தத் தகவலும் ஆசிய, இந்தியச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்க உற்பத்தி நிலவரம்
அமெரிக்காவில் கடந்த மே மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி சரிந்துள்ளது. பெடரல் வங்கி வட்டியை உயர்த்தி இருப்பதால், இனிவரும் காலங்களில் உயரக்கூடும்

நேரடிவரிவருவாய்
இந்தியாவின் நேரடி வரி வருவாய் ஜூன் மாதம் வரை 45சதவீதம் அதிகரித்து ரூ3.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.கார்ப்பரேட்,தனிநபர் வரி ரூ.1.70 லட்சம் கோடி, பரிமாற்றவரி ரூ.1.67 லட்சம் கோடி எனத் தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-22ம்ஆண்டில் ஜூன் மாதம் வரை ரூ.2.33 லட்சம் கோடியாகத்தான் இருந்தது
பிட்காயின் விலை சரிவு
கிரிப்டோகரன்ஸிகளில் முக்கியமான பிட்காயின் மதிப்பு கடந்த 18 மாதங்களில் இல்லாத வகையில் 20ஆயிரம் டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. பிட்காயின் முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகம் என்பதால் இந்தத் தகவலும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அந்நிய முதலீட்டாளர்கள்
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இதுவரை ரூ.7818 கோடிக்கு பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கல் ரூ.6,086 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். அந்நிய முதலீ்ட்டாளர்கள் தொடர்ந்து சந்தையிலிருந்து முதலீட்டை எடுத்துவருவதுசந்தையின் நம்பகத்தன்மையை பாதிக்கும். இந்த காரணியும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
