குறைந்த விலையில் பங்குகளை வாங்கி லாபம் ஈட்ட சந்தை நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். Network18, Suzlon Energy, Allcargo Gati, Filatex India, மற்றும் Autoline Industries போன்ற நிறுவனங்களின் பங்குகள் ரூ.100 க்குள் கிடைக்கின்றன.
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்றைய தினம் பெரிய ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் முடிவடைந்தது. இருந்த போதிலும் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது.குறிப்பாக, நிப்டி ஸ்மால்-கேப் குறியீடு 7வது நாளாக உயர்ந்து, 2025 ஜனவரி 3க்கு பிறகு உச்சத்தை தொட்டது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நூறு ரூபாய் இருந்தாலே ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கி லாபம் குவிக்கலாம் என்றால் யாருக்காவது கசக்குமா என்ன ?. மும்பை பங்குச்சந்தை குறீட்டென் சென்செக்ஸ் மற்றும் தேதிய பங்குசந்தை குறியீட்டென் நிஃப்டி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறும் சந்தை நிபுணர்கள், கையில் கொஞ்சம் காசு இருந்தால் அதனை குறைந்த விலையில் உள்ள பங்குகளை வாங்கி ஆதாயம் அடையலாம் என தெரிவித்துள்ளனர்.
Network18
வாங்கும் விலை: ₹57
இலக்கு விலை: ₹62
Stop Loss: ₹55
Network18 என்பது, இந்தியாவில் மிகப்பெரிய மீடியா நிறுவனங்களில் ஒன்றாகும், இதில் இந்தியா முழுவதும் 16 மொழிகளில் 20 செய்தி சேனல்களும், 13 மொழிகளில் 4 ஆன்லைன் செய்தி தளங்களும் உள்ளன. இந்நிறுவனம் பல பிரிவுகளில் செயல்படுகிறது, இதில் செய்தி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் வணிகம் ஆகியவை அடங்கும்.
Suzlon Energy
வாங்கும் விலை: ₹67.35 - ₹68.35
இலக்கு விலை: ₹68.80, ₹72, ₹75, ₹78
Stop Loss: ₹65.80
சுஸ்லான் எனர்ஜி (Suzlon Energy) என்பது புனேவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு ஆற்றல் நிறுவனம் ஆகும். குறிப்பாக, அது ஒரு காற்றாலை ஆற்றல் உற்பத்தியாளர், இந்தியாவில் முன்னோடியாகவும், உலக அளவில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாகவும் உள்ளது.
Allcargo Gati
வாங்கும் விலை: ₹73.25 - ₹74.25
இலக்கு விலை: ₹76, ₹78, ₹80, ₹83
Stop Loss: ₹71.70
Allcargo Gati Ltd. என்பது இந்தியாவின் ஒரு முன்னணி தளவாட மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை நிறுவனம். இது மேற்பரப்பு மற்றும் வான் எக்ஸ்பிரஸ் தளவாடங்கள், கிடங்குகள், விநியோகச் சங்கிலி, விமான சரக்கு மற்றும் இ-காமர்ஸ் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. 1989 இல் கதி என்ற பெயரில் நிறுவப்பட்டது, பின்னர் Allcargo Gati என பெயர் மாற்றப்பட்டது
Filatex India
வாங்கும் விலை: ₹56.20
இலக்கு விலை: ₹60, ₹63
Stop Loss: ₹55
ஃபிலாடெக்ஸ் இந்தியா லிமிடெட் என்பது ஜவுளிப் பொருட்கள், குறிப்பாக பலியஸ்டர் நூல்கள், பாலியஸ்டர் சில்லுகள் மற்றும் பிற ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு இந்திய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நுகர்வோர் சுழற்சிப் பிரிவில் செயல்படுகிறது, மேலும் ஈவுத்தொகையை செலுத்துகிறது.
Autoline Industries
வாங்கும் விலை: ₹89.20
இலக்கு விலை: ₹95
Stop Loss: ₹86
ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Autoline Industries Ltd) என்பது ஒரு இந்திய நிறுவனமாகும், இது வாகன உதிரிபாகங்கள் மற்றும் தொகுப்புகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் முக்கியமாக சப்ளையர் மற்றும் OEMகளுக்கு வாகன உதிரிபாகங்களை வழங்குகிறது.