share market today :மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று காலை மோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாற்று வீழ்ச்சி அடைந்து சரிந்து வருகிறது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று காலை மோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாற்று வீழ்ச்சி அடைந்து சரிந்து வருகிறது.

அமெரிக்க பணவீக்கம்

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான சில்லரைப் பணவீக்கம் நேற்று வெளியானதில் 8.3 சதவீதமாக குறைந்திருந்தது. இருப்பினும் 8 சதவீதப் பணவீக்கம் என்பது ஆபத்தானதே. 

இதனால் எதிர்காலத்தில் பெடரல் வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கிடையே இன்று மாலை நுகர்வோர் விலைப் பணவீக்கம் அமெரிக்காவில் வெளியாகிறது. இதை அடிப்படையாக வைத்தே பணவீக்கமும், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் இருக்கும் எனத் தெரிகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

டாலர் குறியீடு தொடர்ந்து வலுப்பெற்று 104 ஆக அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளின் கரன்ஸிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்து வருவதால், இந்தியாவில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வரலாற்று வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

இதனால் பங்குச்சந்தை தொடங்கியவுடனே வர்த்தகம் சரிவுடன் ஆரம்பித்தது. மும்பைப் பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சியுடனும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 16ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. இந்த சரிவு நேரம் செல்லச் செல்ல அதிகரித்து ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது.

1000 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 856 புள்ளிகள் வீழ்ச்சியுடன், 53,202 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 268 புள்ளிகள் சரிவுடனும்15,899 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் பவர்கிரிட் பங்கு மட்டுமே லாபத்தில் உள்ளது மற்ற 29 பங்குகளும் சரிவில் உள்ளன. ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. நிப்டியில் பொதுத்துறை வங்கித்துறை பெரிய அடி வாங்கி 3 சதவீதம் சரிந்துள்ளன.

முதலீட்டாளர்களுக்கு இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி காலி: ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து இதுவரை ரூ.34 லட்சம் கோடி இழப்பு. வர்த்தகம் நேற்று முடியும்போது சந்தை மதிப்பு ரூ.246.31 லட்சம் கோடி இருந்த நிலையில் இன்று காலை சரிவுக்குப்பின், ரூ.241.15 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது

முதலீட்டாளர்களுக்கு இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி காலி: ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து இதுவரை ரூ.34 லட்சம் கோடி இழப்பு. வர்த்தகம் நேற்று முடியும்போது சந்தை மதிப்பு ரூ.246.31 லட்சம் கோடி இருந்த நிலையில் இன்று காலை சரிவுக்குப்பின், ரூ.241.15 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது

பொதுத்துறை வங்கி பங்குகள்

பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி, லார்சன் அன்ட் டூப்ரோ, டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, டெக் மகிந்திரா, மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்குகள் 3 சதவீத சரிவில் உள்ளன. பிரிட்டானியா, அப்பலோ மருத்துவமனை, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் நிப்டியில் சரிவில் உள்ளன. பவர்கிரிட், ஓஎன்ஜிசி, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ பங்குகள் லாபத்தில் உள்ளன.

மோசமான வீழ்ச்சி

டாலருக்குஎதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவுடன் ரூ.73.55க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.77.46 என்ற அளவுக்கு சரிந்ததே மோசமானதாக இருந்தது, அதைவிட இன்று 9 பைசா கூடுதலாக மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.