Share market today: மும்பை, தேசியப் பங்குசந்தைகள் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர். பங்குகளை ஆர்வத்துடன் வாங்கவும், கைமாற்றவும் செய்து வருகின்றனர்.

மும்பை, தேசியப் பங்குசந்தைகள் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர். பங்குகளை ஆர்வத்துடன் வாங்கவும், கைமாற்றவும் செய்து வருகின்றனர்.

விலை குறைவு

ரஷ்யா உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு, விலை உயரக்கூடும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலையீட்டுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறைந்துவருவது முதலீட்டாளர்களுக்கு பெரிய நம்மிதி அளித்துள்ளது.

இதைப் படிங்க மறக்காதிங்க: பேடிஎம் நிலைமை இப்படியா ஆகணும்! 2 நாளில் 20% சரிவு: பிஎஸ்இ டாப் 100 லிஸ்டிங்கிலேயே காணோம்

பெடரல் வங்கி

அதுமட்டுமல்லாமல் முதலீட்டாளர்கள் பெரிதும்எதிர்பார்த்த அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்புக்கு பதில் கிடைத்தது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்க பெடரல் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது, இந்த ஆண்டு முடிவுக்குள் 6 முறை வட்டி உயர்த்தப்படும் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து, பெடரல் வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்காவின் நாஷ்டாக், ஜப்பான் பங்குச்சந்தை, ஹாங்காங் சந்தை ஆகியவை ஏற்றம் கண்டன. உலகப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருப்பது இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதால், பங்குச்சந்தை தொடங்கும்போதே ஏற்றத்துடன் தொடங்கியது.

ஏற்றத்தில் பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் தொடங்கியது, அதேபோல, தேசியப் பங்குச் சந்தையில் நிப்டி,220 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வர்த்தகம் செய்துவருகின்றனர்

இதைப் படிங்க மறக்காதிங்க:  ரஷ்யாவிடமிருந்து 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல்: இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகள் அனைத்தும் லாபத்துடன் நகர்ந்து வருகின்றன. ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, கோடக் வங்கி, எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் 3 % உயர்ந்தன

லாபம்

நிப்டியில் வங்கி, ஆட்டோமொபைல், நிதித்துறை, எப்எம்சிஜி, ஐடி, ஊடகம், உலோகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி, தனியார் துறை வங்கி, ரியல்எஸ்டேட் ஆகிய துறைகள் லாபத்துடன் செல்கின்றன

இதைப் படிங்க மறக்காதிங்க:  பங்குச்சந்தையில் பிற்பகலுக்குப்பின் புகுந்த கரடி; 5 நாட்களுக்குப்பின் சரிவு காரணம் என்ன?

காரணம் என்ன

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த உயர்வு குறித்து ஜியோஜித் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில் “ அமெரிக் பெடரல் வங்கி 2018ம் ஆண்டுக்குப்பின் வட்டியில் 25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக இந்த ஆண்டில் 6 முறை வட்டி உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு எதிர்பாராதது.பெடரல் வங்கி தலைவர் பாவெல் அறிவிப்பின்படி, அமெரிக்க பொருளாதாரம் வலுவானது. கடினமான நிதிக்கொள்கையையும் தாங்கும் திறனுடையது எனக் கூறியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் சந்தையில் இறக்கத்துக்குப்பதிலாக ஏற்றம் காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலையும் குறைந்துவருவது சந்தையின் வளர்ச்சிக்குஉதவியது. எப்பிஐ முதலீட்டாளர்களும் நீண்டகாலத்துக்குப்பின் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் சந்தையில் முன்னேற்றம் காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்