paytm share price :பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனினேஷன், பிஎஸ்இ டா100 மதிப்பு மிக்கநிறுவனங்கள் பட்டியலிலிருந்து தூக்கப்பட்டது. பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 நாட்களில் 20 சதவீதம் சரிந்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனினேஷன், பிஎஸ்இ டா100 மதிப்பு மிக்கநிறுவனங்கள் பட்டியலிலிருந்து தூக்கப்பட்டது. பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 நாட்களில் 20 சதவீதம் சரிந்துள்ளது.

தடை

பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கத் ரிசர்வ் வங்கி தடைவிதித்ததைத் தொடர்ந்து இந்த சறுகக்ல் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், “ பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது. அந்த வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவை தணிக்கை செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டிருந்தது

இதைப் படிக்க மறக்காதிங்க: paytm:பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கைது: விவரம் என்ன?

20சதவீதம் வீழ்ச்சி

இதையடுத்து, பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் நேற்று பெரும் சரிவைச் சந்தித்தன. 13 சதவீதம் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு பங்கு ரூ.700ஆகக் குறைந்தது. இன்று மேலும் சரிந்து பங்கின் விலை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

சீன நிறுவனங்கள்

பேடிஎம் பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வர்கள் குறித்து ஆண்டு தணிக்கையை ரிசர்வ் வங்கி நடத்தியது. அப்போது, பேடிஎம் வங்கி, தனது சர்வரிலிருந்து பல்வேறு தகவல்களை சீனாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தது தெரியவந்தால் ரிசர்வ் வங்கி தடை விதித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதைப் படிக்க மறக்காதிங்க: paytm share: பேடிஎம் பங்குகள் செம அடி: சரிவுக்கு காரணமான இரு விஷயங்கள்

டா 100 லிஸ்டில் இல்லை

இந்தத் தகவலைத் தொடரந்து இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து பேடிஎம் பங்குகளின்விலை சர்ரென சறுக்கியது. இன்றைய வர்த்தகத்தில் 7 சதவீதம் சரிந்து 20 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது

பேடிஎம் நிறுவன சந்தைமதிப்பு ரூ.40,863 கோடியாகக் குறைந்தது. பிஎஸ்இ டா100 நிறுவனங்கள் லிஸ்டிங்கில் பேடிஎம் நிறுவனம் 112 இடத்துக்கு சரிந்ததால், லிஸ்டிலிருந்து நீக்கப்பட்டது. 

நிலைமை மோசம்

2021, நவம்பர் 18ம் தேதி பங்குச்சந்தையில் பேடிஎம் நுழைந்தது. பிஎஸ்இ டாப்100 நிறுவனங்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனம் பட்டியலிடும்போது, ரூ.60,537 கோடி மதிப்பு இருந்தது. அப்போது, 51-வது இடத்தைப் பிடித்து சந்தை மதிப்பு ரூ.1.01 லட்சம் கோடியாக வைத்திருந்தது.

இதைப் படிக்க மறக்காதிங்க: paytm share:பேடிஎம் வங்கியை ரிசர்வ் வங்கி தண்டித்ததற்கு இதுதான் காரணமா?

நவம்பர் 18ம் தேதி பங்குச்சந்தை வர்த்தகத்தின் போது பேடிஎம் பங்கு அதிகபட்சமாக ரூ.1,961 வரை விலை போனது. ஆனால், பங்கின் உண்மையான ரூ.2,150 எட்டவில்லை. ஆனால், கடந்த இரு நாட்கள் ஏற்பட்ட சரிவில் ஏறக்குறைய 71 சதவீத உண்மையான விலையை பேடிஎம் நிறுவனம் இழந்துவிட்டது. பங்குச்சந்தையில் பேடிஎம் பங்குகள் விலை 20சதவீதம் சரிந்து ரூ.616.55ஆகக் குறைந்துள்ளது.