paytm : பேடிஎம்(PATM) நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா டெல்லி காவல் டிசிபியின் கார் மீது மோதியதையடுத்து கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுக்கப்பட்டார்.

பேடிஎம்(PATM) நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா டெல்லி காவல் டிசிபியின் கார் மீது மோதியதையடுத்து கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுக்கப்பட்டார்.

காவல அதிகாரியின் கார்

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ விஜய் சேகர் சர்மா, ரேஞ்சர் லேண்ட் ரோவர் கார் பயன்படுத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 22ம் தேதி, தெற்கு டெல்லியில் உள்ள அரவிந்தோ மார்க் அருகே தி மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி அருகே வந்தபோது, காவல்துறை டிசிபியின் கார் மீது விஜய் சேகர் சர்மா கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

புகார்

காரில் அதிர்ஷ்டவசமாக காவல் டிசிபி இல்லை. அவரின் ஓட்டுநர் தீபக் குமார் மட்டுமே இருந்தார். உடனடியாக காரின் எண்ணைக் குறித்த காவல்துறை அதிகாரியின் ஓட்டுநர் தீபர் குமார் மாளவியா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

கைது

அந்தப் புகாரில் “ தி மதர் இன்டர்நேஷனல் பள்ளி அருகே கார் நின்றிருந்தது. பள்ளி மாணவர்கள் சாலையைக் கடந்து செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது வேகமாக வந்த கார், மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது” எனத் தெரிவித்தார். அந்த வாகனத்தின் எண், நிற்காமல் சென்றது உள்ளிட்ட விவரங்களை வழங்கினார். இதையடுத்து, டெல்லிபோலீஸார் ஐபிசி 279(வேகமாக கார்ஓட்டுதல்) பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

விசாரணையில் அந்த கார் குர்கோவனில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்தது. அதன்பின் அந்த காரின் விவரங்களை சேகரித்து விசாரித்தபோது, அந்த கார் பேடிஎம் நிறுவன விஜய் சேகர் சர்மாவுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. 

ஜாமீன்

இதையடுத்து, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர்சர்மாவை போலீஸார் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின் அவரின் சொந்த ஜாமீனிலேயே விடுவித்தனர். இதை காவல்துறை செய்தித்தொடர்பார் சுமந்த் சர்மா தெரிவித்தார். 

சிறிய விபத்து

இதுகுறித்து பேடிஎம் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ சிறிய வாகன விபத்து நடந்துள்ளதற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துக்கோ அல்லது மனிதர்களுக்கோ எந்தவிதமான சேதமும் இல்லை. ஆனால், கைது செய்யப்பட்டதை ஊடகங்கள்தான் பெரிதாக்குகின்றன. ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அன்றை அனைத்து சட்டநடைமுறைகளும்முடிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.