share market today : வார வர்த்தகத்தின் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை, தேசியப் பங்குச்சந்தையின் வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வார வர்த்தகத்தின் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை, தேசியப் பங்குச்சந்தையின் வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இன்னும் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன, பேச்சுக்கு வார்த்தைக்கு இடமில்லை என்பது தெளிவாகிவிட்டது. இதனால் பொருட்களின் சப்ளையில் தடை ஏர்பட்டு, உலகளவில் பொருளதார வளர்ச்சி குறையும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சின்ர்.

பணவீக்கம்
இந்தியாவில் ஏற்கெனவே மார்ச் மாத சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைக் கடந்து 3 மாதங்களாக சென்றுவருகிறது. அதிலும் கடந்த மாதம் 6.95 என்ற சதவீதத்தை எட்டியது. இதற்கிடையே மார்ச் மாத மொத்தவிலைப் பணவீக்கம் 14.55 ஆக அதிகரித்தது. தொடர்ந்து 12வது மாதமாக மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளது.
இன்போசிஸ் வீழ்ச்சி
இது தவிர ஹெச்டிஎப்சி, இன்போசிஸ் ஆகியவற்றின் 4-வது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கில் பங்குகளை விற்றதால் பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. இன்போசிஸ் பங்குகள் மட்டும் 9 சதவீதம் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு ரூ.48 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இதன் மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1129 புள்ளிகள் சரிந்து, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 299 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகம் தொடங்கியது.
இழப்பு
ஆனால், சர்வதேச காரணிகள், மொத்தவிலைப் பணவீக்கம் விவரங்கள், சீனாவின் முதல்காலாண்டு பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஆகியவை சரிவை மேலும் விரிவடைய வைத்ததது. இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1150 புள்ளிகள் சரிந்து, 57,166 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 302 புள்ளிகள் குறைந்து, 17,173புள்ளிகளில் முடிந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
1454 பங்குகள் முன்னோக்கி நகர்ந்தன, 1990 பங்குகள் சரிந்தன, 135 பங்குகள் மதிப்பு மாறவில்லை. 30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில், 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன, 20 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.

டாடா ஸ்டீல், என்டிபிசி
30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில், இன்போசிஸ் பங்குகள் 7.8 சதவீதம் அளவுக்கு சரிந்தன, ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 4.3 சதவீதமும், ஹெச்டிஎப்சி 4.5 சதவீதமும் சரிந்தன.
இது தவிர டெக்மகிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனப் பங்குகளும் சரிந்தன. எஸ்பிஐ வங்கி, பார்திஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், லார்சன் அன்ட் டூப்ரோ ஆகிய பங்குகளும் 2 சதவீதம் சரிந்தன. என்டிபிசி பங்குகள் 3.5 சதவீதம் உயர்ந்தன, டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, எஸ்பிஐ காப்பீடு, ஹெச்டிஎப்சிலைப், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகள் உயர்ந்தநிலையில் முடிந்தன
