Asianet News TamilAsianet News Tamil

share market today: பங்குச்சந்தையில் காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு: லாபத்தில் மகிந்திரா

share market today :மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தையும் கடந்த 2 வர்த்தக தினங்களாக வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்த நிலையில், அனைத்துக்கும் சேர்த்து இன்று ஏற்றத்துடன் முடிந்து.

share market today : Sensex off highs, up 400pts; Nifty below 17,100
Author
Mumbai, First Published Apr 26, 2022, 3:48 PM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தையும் கடந்த 2 வர்த்தக தினங்களாக வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்த நிலையில், அனைத்துக்கும் சேர்த்து இன்று ஏற்றத்துடன் முடிந்து.

சர்வதேச காரணிகள்

 அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தப்போவதாக வெளியிட்ட அறிவிப்பால் கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் நாஷ்டாக்கில் நேற்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்ததால், அந்த எதிரொலி ஆசியப்பங்குச்சந்தையிலும், இந்தியப் பங்குசந்தையிலும் காணப்பட்டது. ஐரோப்பிய பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் முடிந்தது, முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை மேலும் தூண்டியது. 

share market today : Sensex off highs, up 400pts; Nifty below 17,100

இதனால் நம்பிக்கையடைந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கினர்.  ஹெச்டிஎப்சி லைப் 4-வது காலாண்டில் ரூ.504 கோடி நிகர லாபம் அடைந்தது.  அதானி வில்மர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்தது. 

கவனம்

இருப்பினும் உக்ரைன்,ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைவதற்கான வாய்ப்பு, சீனாவில் அதிகரி்த்துவரும் கொரோனா பரவல், அதனால் பல மாநிலங்களில் லாக்டவுன் அறிவிப்பு ஆகியவற்றையும் எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் கவனித்தனர்.

பங்குச்சந்தையில் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் மாலை வரை உயர்வுடனே சென்றது முதலீட்டாளர்களுக்கு நம்மதியளித்தது.  மும்பைப் பங்குச்சந்தையில் மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 776 புள்ளிகள் அதிகரித்து, 57,356 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 246 புள்ளிகள் உயர்ந்து, 17,200 புள்ளிகளில் உயர்வுடன் முடிந்தது.1886 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 1422 பங்குகள் சரிவும், 108 பங்குகள் மதிப்பு மாறாமலும் உள்ளன

share market today : Sensex off highs, up 400pts; Nifty below 17,100

மகிநதிரா அன்ட் மகிந்திரா

நிப்டியில் மகிந்திரா அன்ட் மகிந்திரா, அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன், பவர் கிரிட், ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக லாபமடைந்தன. ஓஎன்ஜிசி, ஹின்டால்கோ, அப்பலோ மருத்துவமனை,ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிந்தன.

மும்பைப் பங்குச்சந்தையில் மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனப் பங்கு அதிகபட்சமாக 4 சதவீத வளர்ச்சி பெற்றது. இன்டஸ்இன்ட் வங்கி 3.5 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. பஜாஜ் பைனாஸ், எஸ்பிஐ, இன்போசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் தலா 2 சதவீதமும் வளர்ச்சி அடைந்தன. சன்பார்மா, டாக்டர் ரெட்டீஸ், ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, டைட்டன், பார்தி ஏர்டெல் பங்குகளும் லாபமடைந்தன.  

share market today : Sensex off highs, up 400pts; Nifty below 17,100

நிப்டியில் உயர்வு

நிப்டியில் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், மின்சக்தி துறைப் பங்குகள் அதிகபட்சமாக 2 முதல் 3 சதவீத ஏற்றமடைந்தன. அதைத் தொடர்ந்து, எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி,தனியார்  வங்கி, மருந்துத்துறை, நிதிச்சேவை, வங்கி ஆகிய துறைகள் சராசரியாக ஒரு சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தன

Follow Us:
Download App:
  • android
  • ios