share market today: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் வட்டிவீதம் உயர்த்தப்படாது, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்படும் என்ற அறிவிப்பால் மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப்பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் வட்டிவீதம் உயர்த்தப்படாது, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்படும் என்ற அறிவிப்பால் மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப்பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கடந்த 3 நாட்களாக பங்குச்சந்தையில் சரிவு தொடர்ந்த நிலையில் அதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டம் இன்று நடந்து. இதில் பேசிய கவர்னர் சக்தி காந்த தாஸ் ரெப்போ ரேட் வீதம் தொடர்ந்து நிலையாக இருக்கும் என அறிவித்தார். நாட்டில் பணவீக்கம் உயர்வாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்களிக்கும் நோக்குடன் இந்தமுறை வட்டிவீதத்தில் மாற்றம் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

சென்செக்ஸ் ஏற்றம்
இதனால் முதலீட்டாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்,வட்டி வீதம் மாறாமல் இருப்பதால் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கினர். காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம், ரிசர்வ் வங்கி அறிவிப்புக்குப்பின் களைகட்டி லாபத்துடன் முடிந்தது
மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 412 புள்ளிகள் உயர்ந்து, 59,447 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி161 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,800 புள்ளிகளில் நிலைபெற்றது

ஐடிசி லாபம்
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 25 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. ஐடிசி பங்குகள் அதிகபட்சமாக 52 வாரங்களில் இல்லாத அளவாக 4 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன், நெஸ்ட்லே, டாக்டர்ரெட்டீஸ், அல்ட்ராடெக், இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, இந்துஸ்தான் யுனிலீவர், கோடக்வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, பவர் கிரிட், , டிசிஎஸ் ஆகிய பங்குகள் லாபத்தில் முடிந்தன. மாறாக ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், மாருதி, என்டிபிசி, சன்பார்மா, டெக்மகிந்திரா, ஹெச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் சரிந்தன.

நிப்டி
கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ காப்பீடு, ஜேஎஸ்டபிள்யு, மகிந்திரா அன்ட் மகிந்திரா ஆகியவற்றின் பங்குகள் நிப்டியில்அதிக லாபமடைந்தன. சிப்லா, என்டிபிசி, டெக் மகிந்திரா, மாருதி சுஸூகி, சன்பார்மா ஆகியவையும் லாபத்துடன் கைமாறின. நிப்டியில் எப்எஎம்சிஜி, உலோகம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகள் லாபமடைந்தன.
