share market today :வர்த்தகத்தின் முதல்நாளான இன்று தேசியப் பங்குச்சந்தையும், மும்பைப் பங்குச்சந்தையும் சரிவுடன் தொடங்கி, வீழ்ச்சியுடன் முடித்தன. காலாண்டு முடிவுகள் வெளியாவதையடுத்து, தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் பெரிய அடிவாங்கின.
வர்த்தகத்தின் முதல்நாளான இன்று தேசியப் பங்குச்சந்தையும், மும்பைப் பங்குச்சந்தையும் சரிவுடன் தொடங்கி, வீழ்ச்சியுடன் முடித்தன. காலாண்டு முடிவுகள் வெளியாவதையடுத்து, தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் பெரிய அடிவாங்கின.
சர்வதேச நிலவரம்
அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்களை இன்று வெளியிட இருக்கிறது. இதனை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர், பணவீக்கம் அதிகரித்தால், வட்டிவீதத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதால் அமெரி்க்க பெடரல் வங்கியின் அறிவிப்பை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

சீனா லாக்டவுன்
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நகரங்களில் லாக்டவுன் நீடிக்கிறது. சீனாவில் லாக்டவுன் நீடிப்பதும் உலகளவில் மற்றொரு அலையை உண்டாக்குமா என்று முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் ஆர்வத்துடன் முதலீடு செய்யவில்லை.
இது தவிர கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2 டாலர் சரிந்தது, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைய வாய்ப்பு ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளன.
ஐடி காலாண்டு முடிவு
இது தவிர இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ், ஹெச்சிஎல், டிசிஎஸ் உள்ளி்ட்டவையின் 4-வது காலாண்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்த முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் ஐடி துறைகளின் பங்குகள் விற்று, லாபம்பார்க்கத் தொடங்கினர். இதனால் தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் பெருத்தஅடிவாங்கின.

காலை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே மும்பைப்பங்குச்சந்தையில் 100புள்ளிகளும் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 52 புள்ளிகள் வீழ்ந்து வர்த்தகத்தை நடத்தன.
கடும் சரிவு
ஆனால், இந்த சரிவு பிற்பகலுக்குப்பின் அதிகரித்தது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 482 புள்ளிகள் சரிந்து, 58,964 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 109 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 17,674 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.
இன்றைய வர்த்தகத்தில் 282 பங்குகள் லாபமீட்டின 1,393 பங்குகள் சரிவில் முடிந்தன, 121 பங்குகள் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
ஐடி பங்குகள் வீழ்ச்சி
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 20 பங்குகள் சரிவில் முடிந்தன, 10பங்குகள் லாபமடைந்தன. குறிப்பாக ஹெச்சிஎல், இன்போசிஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, விப்ரோ, எஸ்பிஐ லைப், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், ஆக்சிஸ் வங்கிப் பங்குகள் பெருத்த அடிவாங்கின. அதிலும் ஹெச்சிஎல், டிசிஎஸ் பங்குகள் 2 சதவீதம் சரிந்தன

அதேநேரம், கிராஸிம், அதானிபோர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், யுபிஎல், சிப்லா, அப்பல்லோ மருத்துவமனை, பிபிசிஎல் ஆகிய பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.
நிப்டியில் லாபம் இழப்பு
நிப்டியில் தகவல்தொழில்நுட்பம், நிதிச்சேவை, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, துறைகள் 1 சதவீதம் அளவுக்குச் சரி்ந்தன. ரியல்எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஊடகம் துறைப் பங்குகள் லாபத்தில் முடிந்தன.

ஆட்டமொபைல்,ஊடகம், உலோகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி,ரியல்எஸ்டேட் துறை பங்குகள் லாபமீட்டி வருகின்றன. தகவல்தொழில்நுட்பம், எப்எம்சிஜி, தனியார்வங்கி, நிதிச்சேவை ஆகிய துறைகளின் பங்குகள் சரிவில் உள்ளன
