share market today : நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை, சர்வதேச காரணிகள் சாதகமில்லாமல் இருப்பது போன்றவற்றால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து காலையிலிருந்து பங்குகளை விற்றதால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை, சர்வதேச காரணிகள் சாதகமில்லாமல் இருப்பது போன்றவற்றால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து காலையிலிருந்து பங்குகளை விற்றதால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

கடந்த புதன்கிழமை வர்த்தகம் முடிவில் பங்குச்சந்தையின் மதிப்பு ரூ.272 லட்சம் கோடியாகஇருந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ரூ.268.19 லட்சம் கோடியாகச் சரிந்தது.

இந்த சரிவுக்கு 5 முக்கியக் காரணங்கள் கூறப்படுகிறது.

இன்போசிஸ், ஹெச்டிஎப்சி காலாண்டு முடிவுகள்

கடந்த வாரம் இன்போசிஸ், ஹெச்டிஎப்சி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியானது. இந்த நிறுவனங்களின் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு மனநிறைவாக இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து இரு நிறுவனங்களின் பங்குகளையும் விற்று ஆதாயம் பார்க்கத் தொடங்கினர், இரு நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ் 500 புள்ளிகளை இழந்தது 

சீனாவின் ஜிடிபி

2022ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவில் சீனாவின் முதல்காலாண்டு ஜிடிபி 4.8சதவீதம் வளர்ந்துள்ளது. இது கடந்த கடைசி காலாண்டில் 4 சதவீதம் இருந்த அளவைவிட சற்று அதிகம். இது எதிர்பார்த்த அளவைவிட சற்று அதிகரித்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனாவில் சிக்கிய நிலையிலும் வளர்ச்சி அதிகரித்துள்ளது. சீனாவின் பல்வேறு நகரங்கள் கொரோனாவின் பிடியில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி பாதிக்குமோ என்ற அச்சம் உலகளவில் பாதிக்குமோ என்ற பயத்தால் முதலீட்டாளர்கள் அஞ்சினர்

இந்தியாவில் பணவீக்கம் உயர்வு
இந்தியாவில் ஏற்கெனவே மார்ச் மாத சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைக் கடந்து 3 மாதங்களாக சென்றுவருகிறது. அதிலும் கடந்த மாதம் 6.95 என்ற சதவீதத்தை எட்டியது.

 இதற்கிடையே மொத்தவிலைப் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் இன்று வெளியாக உள்ளன. கடந்த 6 மாதங்களாக மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் சென்றநிலையில், கடந்த மார்ச் மாதத்திலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் ஜூன் மாதத்தில் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கடனுக்கான வட்டியை அதிகம் செலுத்த வேண்டியதிருக்கும் என்ற அச்சமும் சந்தையை சூழ்ந்தது

ஐடி இன்டெக்ஸ்

தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் 4 சதவீதத்துக்கும் அதிகமாகச் சரிந்ததும் சந்தையில் வீழ்ச்சிக்கு காரணமாகும். எதிர்பார்த்த அளவுக்கு காலாண்டு முடிவுகள் மனநிறைவுடன் இல்லாதது காரணம். குறிப்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லாததால் இன்று பங்கு மதிப்பு 9% சரிந்தன. 

கச்சா எண்ணெய் விலை உயர்வு

உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுவதால், கச்சா எண்ணெய் விலை இன்று உயர்ந்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 1.50 டாலரும், டெக்சாஸ் கச்சா எண்ணெய் 98 சென்ட்களும் உயர்ந்தன