ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பால் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பால் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.
2022ம் ஆண்டு காலண்டர் ஆண்டின் முதல் நிதிக்கொள்கை அறிவிப்பில், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை மாற்றவில்லை, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்களிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டது, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சி போன்றவை சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது

கடனுக்கான ரெப்போ ரேட் வீதம் 4%, ரிவர்ஸ் ரெப்போ 3.35 என்ற கணக்கிலேயே ரிசர்வ் வங்கி வைத்தது. தொடர்ந்து 10-வது நிதிக்கொள்கையாக வட்டிவீதம் மாற்றப்படவில்லை.
ரிசர்வ்வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பால் முதலீட்டாளர்கள் சந்தையில் நம்பிக்கையுடன் பங்குகளை வாங்கியதால், வர்த்தகம் தொடக்கத்திலிருந்தே ஏறுமுகத்துடன் இருந்தது. வர்தத்கம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 594 புள்ளிகள் உயர்ந்து 58,926 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 59ஆயிரம் புள்ளிகள்வரை சென்று சரிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 142 புள்ளிகள் உயர்ந்து, 17,600 புள்ளிகளில் முடிந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, கோடக்வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பவர் கிரிட், என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன. அதேசமயம் மாருதி சுஸூிகி, அல்ட்ராடெக் சிமென்ட், நெஸ்டில் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகள் சரிந்தன.
நிப்டியில், வங்கித்துறை, நிதிச்சேவை, தகவல் தொழில்நுட்பம், உலோகம், தனியார் வங்கிகளின் பங்குகள் லாபமடைந்தன. பொதுத்துறை வங்கிகள், ஆட்டோமொபைல் துறை பங்குகள் சரிந்தன
