Share market today: ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு போன்ற காரணிகளால்,  மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் காலையில் ஏற்றத்துடன் தொடங்கி பிற்பகலில் சரிவுடன் வர்த்தகம் முடிந்தது

ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு போன்ற காரணிகளால், மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் காலையில் ஏற்றத்துடன் தொடங்கி பிற்பகலில் சரிவுடன் வர்த்தகம் முடிந்தது

 உக்ரைன்-ரஷ்யா போர் , கச்சா எண்ணெய் விலை பேரல் 118 டாலராக உயர்ந்தது, ரஷ்ய நிறுவனங்களுக்கு எஸ்பிஐ வங்கி பரிமாற்றத்தை நிறுத்தியது போன்றவற்றால், மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஊசலாட்டத்துடன் காணப்பட்டது.

இன்று காலை வர்த்தகம் 450 புள்ளிகள் வரை உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன இருந்தனர். ஆனால் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 118 டாலராகஉயர்ந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்தனர், பங்குச்சந்தையிலும் பிற்பகலுக்குப்பின் வர்த்தகத்தில் பெரும் ஊசலாட்டம் காணப்பட்டது

வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 366 புள்ளிகள் சரிந்து 55,102 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 55,996 புள்ளிகள் வரை சென்றது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 96 புள்ளிகள் குறைந்து 16,509 புள்ளிகளில் நிலைகொண்டது. 

மும்பைப் பங்குச்சந்தையில் பிற்பகலுக்குப்பின் ஆட்டமொபைல், வங்கித்துறை, போன்ற துறைகள் பங்குகள் சரிவில் முடிந்தன. ஆனால், உலோகம், கட்டுமானத்துறை, ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகத்துறை ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்தில் முடிந்தன.மும்பைப் பங்குச்சந்தையில் 30 பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபம் ஈட்டின. 

மும்பை பங்குச்சந்தையில், பவர்கிரிட் , விப்ரோ, ஐடிசி, என்டிபிசி, டாடாஸ்டீல், இன்டஸ்இன்ட் வங்கி, சன்ஃபார்மா, ஹெச்சிஎல் டெக், டெக்மகிந்திரா, இன்போசிஸ்ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன. 
டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், கோடக்வங்கி, டைட்டன், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஏசியன்பெயின்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன.