Asianet News TamilAsianet News Tamil

Share Market Live Today: பங்குச்சந்தை மீண்டும் சரிவு: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி! காரணம் என்ன?

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த இரு நாட்களாக உயர்ந்தநிலையில் இன்று மீண்டும் சரிவை நோக்கி பயணித்துள்ளது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

Sensex is down 2500 points. Nifty about 18,000: Adani Enterprise suffers a loss
Author
First Published Jan 19, 2023, 9:35 AM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை கடந்த இரு நாட்களாக உயர்ந்தநிலையில் இன்று மீண்டும் சரிவை நோக்கி பயணித்துள்ளது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

அமெரி்க்க பங்குசந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவின் எதிரொலிதான் இந்தியச் சந்தையிலும் இன்றுகாலை முதல் இருந்து வருகிறது. அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் ரிசர்வ் உறுதிபூண்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி நடக்கும் கூட்டத்தில் 25 புள்ளிகள்வரை வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்று செய்திகள் வெளியாகின.

Sensex is down 2500 points. Nifty about 18,000: Adani Enterprise suffers a loss

அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவை பொருளாதார மந்தநிலைக்குள் செல்லாமல் தடுக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால், பெடரல்ரிசர்வ் வட்டியை உயர்த்தலாம் என்ற செய்தி வெளியானது.

2023-ல் உலகப் பொருளாதார மந்தநிலை; இந்தியாவுக்கு சாதகம்: உலக பொருளாதார மன்ற சர்வேயில் தகவல்

இதனால் நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையில்முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுப்பதில் ஆர்வமாக இருந்தனர். இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது.

அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு இன்று காலை ஆசிய சந்தைகளிலும் காணப்பட்டது. ஜப்பான், ஹாங்காங், தென் கொரிய பங்குச்சந்தையிலும் காலை முதலே வர்த்தகம் சரிவுடன் சென்று வருகிறது.

Sensex is down 2500 points. Nifty about 18,000: Adani Enterprise suffers a loss

இதனால் இந்திய முதலீட்டாளர்களும் காலை முதலே வர்த்தக்தில் ஆர்வத்துடன் ஈடுபடாமல் லாபநோக்கில் பங்குகளை விற்று வருகிறார்கள். இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 268 புள்ளிகள் வீழ்ந்து, 60,777 புள்ளிகளில்வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 83 புள்ளிகள் குறைந்து, 18082 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.

பங்குச்சந்தை தொடர் உயர்வு: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்! உலோகப் பங்கு லாபம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 7 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன, மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் செல்கின்றன. ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, ஏசியன்பெயின்ட்ஸ், எச்டிஎப்சி வங்கி, பவர்கிரிட், ரிலையன்ஸ், சன்பார்மா ஆகிய பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளன.

Sensex is down 2500 points. Nifty about 18,000: Adani Enterprise suffers a loss

நிப்டியைப் பொறுத்தவரை அனைத்து துறைப் பங்குகளும் சரிவில் செல்கின்றன. உலோகம், ஊடகம், ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள்தலா ஒரு சதவீதம் வீழ்ந்தன.பொதுத்துறைவங்கி, 0.59%, ஐடி 0.71% சரிந்துள்ளன

உற்சாகத்தில் பங்குச்சந்தை!சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு:Nifty எழுச்சி:HDFC லாபம்

நிப்டியில் ஏசியன் பெயின்ட்ஸ், எச்டிஎப்சி லைப், பவர்கிரிட் கார்ப், யுபிஎல், என்டிபிசி ஆகியவை லாபத்தில் உள்ளன. அதானி என்டர்பிரைசஸ், ஹின்டால்கோ, இன்டஸ்இன்ட் வங்கி, டாடாமோட்டார்ஸ், அதானி போர்ட் பங்குகள் சரிவில் உள்ளன

Follow Us:
Download App:
  • android
  • ios