கச்சா எண்ணெய் லேசாகக் குறையத் தொடங்கியது, சர்வதேச சூழல் ஆகியவற்றால், மும்பை மற்றும் தேசியப்பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இன்று இருந்ததால், வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது.
கச்சா எண்ணெய் லேசாகக் குறையத் தொடங்கியது, சர்வதேச சூழல் ஆகியவற்றால், மும்பை மற்றும் தேசியப்பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இன்று இருந்ததால், வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது.
சர்வதேசந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம், அமெரிக்க பங்குச்சந்தையில் உயர்வாக முடிந்தது உள்ளிட்ட காரணிகளால் மும்பை பங்குச்சந்தை 2-வது நாளாக இன்றும் உயர்வுடன் முடிந்தது. இதனால் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளும் தலா 1.1.% ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 58,508 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தகம் முடிவில் 657 புள்ளிகள் உயர்ந்து, 58,565 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையான நிப்டியில் 197 புள்ளிகள் உயர்ந்து, 17,464 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது.
ஆட்டோமொபைல், தகவல்தொழில்நுட்பம், நி்தித்துறை பங்குகள் அதிகளவில் கைமாறின. பொதுத்துறை வங்கிகள், எண்ணெய்மற்றும் இயற்கை எரிவாயு பங்குகள் சரிவில் முடிந்தன. சன் ஃபார்மா, பவர் கிரிட், ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன.

மாறாக, மாருதி சுஸூகி, இன்டஸ்இன்ட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ்பின்சர்வ், விப்ரோ, டைட்டன் நிறுவனப்பங்குகள் லாபத்துடன் முடிந்தன.
நிப்டியில் ஓஎன்ஜிசி, பிபிசிஎல், டாடாஸ்டீல், எஸ்பிஐலைப், ஹெச்டிஎப்சி லைப் உள்பட 8 பங்குகள் சரிவில் முடிந்தன. கோல்இந்தியா, ஐஓசி, ஹின்டால்கோ, மாருதி உள்ளிட்ட பங்குகள் லாபமடைந்தன
