Asianet News TamilAsianet News Tamil

Share MarketToday: 2 நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு

தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

Sensex gains 150 points, while the Nifty50 is above 18,300.
Author
First Published Dec 19, 2022, 9:55 AM IST

தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

கடந்த வாரத்தில் உலகில் முக்கிய வங்கியான அமெரிக்க பெடரல் வங்கி, இங்கிலாந்து வங்கி, ஐரோப்பிய வங்கி ஆகியவை வட்டி வீதத்தை உயர்த்தியதால், அந்த பாதிப்பு ஆசியச்சந்தையிலும் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.

Sensex gains 150 points, while the Nifty50 is above 18,300.

பருப்புகளின் தோல் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து: ஜிஎஸ்டி கவுன்டில் கூட்டம் குறித்த முழுவிவரம்

அது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கும் வாயப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.  இதனால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்த்து லாபநோக்கத்தில் செயல்பட்டதால், பங்குச்சந்தையில் கடந்தவாரம் கடும் சரிவு காணப்பட்டது.

ஆனால், இதில் ஒருநல்ல அம்சமாகப் பார்க்க வேண்டியது, அமெரிக்காவில் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்துவருவதுதான். இதனால், பொருளாதார மந்தநிலைக்கு சாத்தியமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. 

இதற்கிடையே, இந்தியப் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடன் பெறுவதும்,  வழங்குவதும் அதிகரித்துள்ளது பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பி வேகமாக செல்வதைக் காட்டுகிறது.

Sensex gains 150 points, while the Nifty50 is above 18,300.

தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்

அதேநேரம் கடந்த வாரத்தில் தகவல் தொழில்நுட்ப பங்குகள் மோசமாக அடிவாங்கியது, இந்தியப் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.

இது தவிர சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மீண்டும் உலக நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தை அதிகப்படுத்த இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவில் இயல்புநிலை திரும்புவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையே ஏற்படுத்தியது

இதனால் முதலீட்டாளர்களுக்கு காலை நம்பிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், பங்குச்சந்தையில் ஏற்றத்தில் பயணித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 235 புள்ளிகள் அதிகரித்து,61,573 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

 தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 65 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 18,334 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

Sensex gains 150 points, while the Nifty50 is above 18,300.

முதலீட்டாளர்கள் கண்ணீர்! பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 461 புள்ளிகள் வீழ்ச்சி! எஸ்பிஐ 2% அடி

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய பங்குகளில், 10 நிறுவனப் பங்குகள் மட்டும் சரிந்துள்ளன, மற்ற 20 பங்குகள் விலை உயர்ந்துள்ளன. லார்சன் அன்ட் டூப்ரோ, டைட்டன், டெக்மகிந்திரா, ஏசியன்பெயின்ட்ஸ், விப்ரோ, ஹெச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், டாடாமோட்டார்ஸ், என்பார்மா, இன்போசிஸ் பங்குகள் விலை சரிந்துள்ளன.

நிப்டியில், தகவல்தொழில்நுட்பம், மருந்துத்துறை, ஊடகம், வங்கி, ஆட்டமொபைல் பங்குகள் சரிந்துள்ளன. உலோகம், எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி பங்குகள் விலை உயர்ந்துள்ளன

Follow Us:
Download App:
  • android
  • ios