Share Market Today: முதலீட்டாளர்கள் கண்ணீர்! பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 461 புள்ளிகள் வீழ்ச்சி! எஸ்பிஐ 2% அடி

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் முடித்தன. சென்செக்ஸ் 461 புள்ளிகள் வீழ்ந்தது.

Sensex drops 400 points; Nifty ends below 18,300:SBI sheds 2%

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் முடித்தன. சென்செக்ஸ் 461 புள்ளிகள் வீழ்ந்தது.

கடந்த இரு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1300 புள்ளிகளுக்கும் மேல் இழந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை 50 புள்ளிகள் உயர்த்தியதும், தொடர்ந்து வட்டி வீதம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு முதலீட்டாளர்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. 

Sensex drops 400 points; Nifty ends below 18,300:SBI sheds 2%

இதில் எண்ணெய் வார்க்கும் விதமாக அமெரி்க்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்று பல்வேறு வங்கிகளும் கணிப்புகள் வெளியிட்டுள்ளன. அதற்கு ஏற்றார்போல்,  நவம்பர் மாதத்தில் எதிர்பாராத வகையில் சில்லறை விற்பனை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வட்டிவீதம் உயர்வால், கடன் பெறுவது குறைந்து மக்கள் செலவிடும் அளவும் குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவுடன் நேற்று முடிந்தது, ஆசியச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி அனைத்தும் இந்தியச் சந்தையில் இன்று எதிரொலித்தன.

இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை  வாங்குவதில் ஆர்வம்காட்டாமல் விற்பனை செய்து லாபம்ஈட்டுவதில் முயன்றதால் தொடக்கம் முதல் முடிவு வரை சரிவு காணப்பட்டது. 

Sensex drops 400 points; Nifty ends below 18,300:SBI sheds 2%

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 461 புள்ளிகள் குறைந்து, 61,337 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில், நிப்ட 145 புள்ளிகள் சரிந்து, 18,269 புள்ளிகளில் நிலை பெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில் 3 நிறுவனப் பங்குகளைவிட மற்ற 27 நிறுவனப் பங்குகள் சரிந்தன. ஹெச்யுஎல், நெஸ்ட்லேஇந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் மட்டும் லாபமீட்டின

நிப்டியி்ல் டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்ரீஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, அதானி போர்ட்ஸ், ஏசியன்பெயின்ட்ஸ், பிபிசிஎல் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்யுஎல், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு பங்குள் லாபமடைந்தன.

Sensex drops 400 points; Nifty ends below 18,300:SBI sheds 2%

நிப்டியி்ல் அனைத்து துறைகளும் சரிவில் முடிந்தன. பொதுத்துறை வங்கி அதிகபட்சமாக 3 சதவீதம் சரிந்தது, அதைத் தொடர்ந்து ரியல்எஸ்டேட், மருந்துத்துறை, ஊடகம் தலா ஒரு சதவீதம் வீழ்ச்சி அடைந்தன

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios