Sovereign Gold Bond Scheme: தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்
2022-23ம் ஆண்டுக்கான 3-ம் கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை வரும்திங்கள்கிழமை(19ம்தேதி) தொடங்குகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,409 என்று விலை நிர்ணயித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2022-23ம் ஆண்டுக்கான 3-ம் கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை வரும்திங்கள்கிழமை(19ம்தேதி) தொடங்குகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,409 என்று விலை நிர்ணயித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை 2 முறை தங்கப்பத்திரங்களை மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் விற்பனை செய்துள்ளது. தற்போது 3வது முறையாக தங்கப்பத்திரங்கள் விற்பனை நடக்கிறது.
இந்த தங்கப்பத்திரங்களை வாங்குவோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கவும் ரிசர்வ்வங்கியை மத்திய அ ரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆன்லைன் பரிமாற்றம் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி! 3-வது கட்ட தங்கப் பத்திரங்கள் விற்பனை எப்போது? முழு விவரம்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நடப்பு நிதியாண்டுக்கான 3வது கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை வரும் 19ம் தேதி தொடங்குகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,349 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4வது கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை 2023, மார்ச் 6 முதல் 10ம் தேதிவரை நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
இந்த தங்கப்பத்திரங்களை, சிறுநிதி வங்கி, பேமெண்ட் வங்கி, மண்டல கிராம வங்கி ஆகியவற்றைத் தவிர பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், எஸ்ஹெச்ஐசிஎல், சிசிஐஎல், குறிப்பிட்ட அஞ்சலங்கள், என்எஸ்இ, பிஎஸ்இ பங்குச்சந்தைகளில் வாங்கலாம்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது: என்னென்ன முடிவுகள் எடுக்கப்படலாம்?
இந்த தங்கப்பத்திரத்தின் முதிர்ச்சி காலம் 8 ஆண்டுகளாகும். ஆண்டுக்கு 2 முறை 2.5 சதவீதம் அளவில் வட்டி கணக்கிட்டு வழங்கப்படும் தனிநபர் அதிகபட்சமாக 4 கிலோ மதிப்பிலும், இந்துக் கூட்டுக்குடும்பத்தினர் 4 கிலோ அளவுக்கும், அறக்கட்டளை மற்றும் சிறு நிறுவனங்கள் அதிகபட்சமாக 20 கிலோ மதிப்புக்குக்கும் தங்கப்பத்திரங்கள் வாங்கலாம்.