GST Council Meeting: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது: என்னென்ன முடிவுகள் எடுக்கப்படலாம்?
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடக்கிறது.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடக்கிறது.
கடைசியாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
1. பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு குறிப்பிட்ட சிறப்பு வரி விதிப்பது குறித்து நாளை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம்.
ஐஆர்சிடிசி பங்குகளை விற்கிறது மத்திய அரசு: விலை தெரியுமா? 5 சதவீதம் பங்கு திடீர் வீழ்ச்சி
2. ஒடிசா நிதிஅமைச்சர் நிரஞ்சன் பூஜாரி இது தொடர்பாக ஆய்வு செய்து, இறுதி அறிக்கையையும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் பான் மசாலா, குட்காவுக்கு கூடுதல் வரிவிதிப்பு வரலாம்.
3. இந்த குழு பான் மசாலா, குட்கா, சிலம், மெல்லும் புகையிலை உள்ளிட்ட 38 பொருட்களுக்கு சிறப்பு வரி விதிப்பது குறித்து பரிந்துரை செய்துள்ளது. அதன் மீது முடிவு எடுக்கப்படலாம்.
vஇந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், டீசலுக்கு வரி குறைப்பு
4. 1500 சிசி எஞ்சின் திறன், 4000மீட்டருக்கு அதிகமில்லாத எஸ்யுவி கார்களுக்கு 22 சதவீதம் காம்பன்சேஷன் செஸ் விதிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளி்க்கும்.
5. அனைத்து விதமான பழக்கூழ் அல்லது பழரசங்களில் கார்பன்டை ஆக்ஸைடு சேர்த்து பதப்படுத்தப்படும்போது, அதற்கு 18சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படலாம்.
6. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் தனியார் சுத்திகரிப்பாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 5 % விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம்.
7. ஜிஎஸ்டி குற்றங்கள் மீது வழக்குத் தொடர வேண்டுமென்றால் அதற்குரிய பணமதிப்பை அதிகப்படுத்துவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் மீது முடிவு எடுக்கப்படலாம்.
8. ஆன்-லைன் கேம், கேசினோஸ், குதிரைப்பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாது. இன்னும் அமைச்சர்கள் குழுவினர் தங்களின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.
இந்தியாவில்தான் பெட்ரோல் விலை மிகக்குறைவு! ஹர்தீப் பூரி பெருமிதம்
9. கடந்த நவம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் ஆன்லைன் கேம், கேசினோஸ், குதிரைப்பந்தயம் ஆகியவற்றுக்கு 28சதவீதம் வரிவிதிக்க ஒப்பதல் அளித்தது ஆனால், இறுதி முடிவு எடுக்கவில்லை
10. ஜிஎஸ்டி சட்டத்தை வரிசெலுத்துவோருக்கு நெருக்கமாக மாற்றும் வகையில், ஜிஎஸ்டி சட்டத்திலும், ஐபிசி சட்டத்திலும் இருக்கும் ஒரே மாதிரியான குற்றங்களை ஜிஎஸ்டி சட்டத்திலிருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்கும்.
11. அறிவியல் ஆராய்ச்சிக்கான சாதனங்களுக்கான கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் வல்லுநர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், இந்த வரி உயர்வால் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படலாம் என கவலை தெரிவித்துள்ளதால், இந்த பொருட்களுக்கான வரி குறைக்கப்படலாம்.
12. பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் இடப்பட்ட சில்லறையில் விற்கப்படும் தயிர், லஸி,மோர் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்கலாம். சில உணவுப் பொருட்கள், தானியங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படலாம்
- 48th GST Council meeting Updates
- 48th Gst Council Meeting
- 48th gst council
- 48th gst council meeting date
- Finance Minister Nirmala Sitharaman
- GST Council Meeting
- GST Council meet
- Nirmala Sitharaman
- Panel to clarify tax relates issues
- gst
- gst council
- gst council meeting 2022
- gst council meeting news
- gst council meeting today
- gst council meeting update
- next gst council meeting
- union budget 2023
- what is gst council