Asianet News TamilAsianet News Tamil

IRCTC Share Price: ஐஆர்சிடிசி பங்குகளை விற்கிறது மத்திய அரசு: விலை தெரியுமா? 5 சதவீதம் பங்கு திடீர் வீழ்ச்சி

ஐஆர்சிடிசி பங்குகளை 5 சதவீதத்தை மத்திய அரசு வெளிச்சந்தையில் விற்கப்போவதாக அறிவித்ததையடுத்து, இன்று ஐஆர்சிடிசி பங்கு விலை 5 சதவீதம் வரை சரிந்தது. 

iRCTC share price: IRCTC shares fall more than 5% when the government announces a stake sale.
Author
First Published Dec 15, 2022, 2:01 PM IST

ஐஆர்சிடிசி பங்குகளை 5 சதவீதத்தை மத்திய அரசு வெளிச்சந்தையில் விற்கப்போவதாக அறிவித்ததையடுத்து, இன்று ஐஆர்சிடிசி பங்கு விலை 5 சதவீதம் வரை சரிந்தது. 
ஐஆர்சிடிசியின் ஒரு பங்கு விலை ரூ.680 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தேசியப் பங்குச்சந்தையில் ஐஆர்சிடிசியின் பங்கு விலை 5.56 சதவீதம் குறைந்து, ஒரு பங்கு விலை 694.05 ஆகக் சரிந்தது. மும்பைப் பங்குச்சந்தையில் ஐஆர்சிடிசி பங்கு விலை 5.49 சதவீதம் குறைந்து, ரூ.694.40 ஆகக் குறைந்தது.

ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் “ மத்திய அரசு ஐஆர்சிடிசியின் 5சதவீத பங்குகளை வெளிச்சந்தையில் விற்க இருக்கிறது. இந்த ஆண்டின் மத்தியஅரசின் முதலீடுவிலக்கல் இலக்கை எட்ட இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அரசுக்கு ரூ.28,383 கோடி கிடைக்கும். ஒரு பங்கை ரூ.680 விலையில் விற்கவும், ஏறக்குறைய 2.5 சதவீதம் பங்குகளை விற்கவும் அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளது.


ஐஆர்சிடிசியின் 4 கோடி பங்குகளை விற்று ரூ.2,700 கோடி நிதிதிரட்ட இலக்கு வைத்துள்ளது மத்தியஅரசு. அடிப்படை விலையிலிருந்து 7.47 சதவீதம தள்ளுபடியுடன் பங்கு விற்கப்படுகிறது. ஐஆர்சிடிசி பங்கு அடிப்படை விலை ரூ.734.90ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசிடம் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 67.40 சதவீத பங்குகள் உள்ளன. இதிலிருந்து 2.5 சதவீதத்தை மட்டும் விற்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாதவர்களுக்கு இன்று பங்கு விற்பனை நடக்கிறது. நாளை சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாதவர்களுக்கும் பங்கு விற்பனை நடக்கிறது

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் ஐஆர்சிடிசியின் நிகர லாபம் 42.54 சதவீதம் அதிகரித்து, ரூ.226.03 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயில் 98 சதவீதம் அதிகரித்து, ரூ.805.80 கோடியாக  உயர்ந்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios