உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் புள்ளிகள் பாதாளத்தில் சரிந்தன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் புள்ளிகள் பாதாளத்தில் சரிந்தன.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாகவே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைனின் இருமாநிலங்களை தன்னாட்சியாக அறிவித்து ரஷ்ய அதிபர் அறிவித்ததற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவத்தன. இந்நிலையில் அன்னிய மண்ணில் ராணுவ நடவடிக்கை தொடர ரஷ்ய நாடாளுமன்றம் அதிபர் புதினுக்கு அனுமதியளித்தது. இந்நிலையில் இந்தியநேரப்படி காலை 6.30மணிக்கு உக்ரைன் மீது போர் தொடுக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் எல்லைக்குள் சென்றுவிட்டனர். உக்ரைனின் எல்லை ஓரங்களில் குண்டுகள் சத்தமும், குண்டுவெடிக்கும் சத்தமும் கேட்டு வருகிறது

உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தையில் சென்சென்க்ஸ் 1900 புள்ளிகள் சரிந்து 55,300 புள்ளிகளாகக் குறைந்தன, தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் 600 புள்ளிகள் சரிந்து 16,500 புள்ளிகளாக குறைந்தது.

போர் பதற்றம் காரணமாக ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலரை எட்டிய நிலையில், இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலரை எட்டியுள்ளது.
நிப்டியில் பொதுத்துறை வங்கி, ஐடி, ஆட்டோமொபைல், உலோகம்ஆகிய துறைகளின் பங்குகள் மோசமாகச் சரிந்தன.