இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக இன்றும் சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ந்தன.

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக இன்றும் சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ந்தன.

அமெரி்க்க பெடரல் ரிசர்வ், வட்டிவீதத்தை 50 புள்ளிகள்வரை மார்ச் மாதத்தில் உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெறுவதும் தொடர்ந்து வருகிறது.

பங்குச்சந்தை| 4 நாட்களுக்குப்பின் சென்செக்ஸ், நிப்டி உயர்வு!

இந்தியப் பங்குச்சந்தை சரிவில் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியும் முக்கியக் காரணமாகும். முக்கிய நிறுவனங்களின்பங்குகள் சரியும்போது அது பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைக்கிறது.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கினாலும், அதைத் தக்கவைக்க முடியவில்லை. வர்த்தகத்தின் பிற்பகுதியில் சரியத் தொடங்கியது மாலை வரை மீளவில்லை. 

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 141 புள்ளிகள் சரிந்து, 59,463 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 45 புள்ளிகள் குறைந்து 17,465 புள்ளிகளி்ல் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 12 நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன. மற்ற 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன.

ஜீ என்டர்டெயின்மென்ட் திவால் நடவடிக்கை எடுக்க IndusInd வங்கிக்கு என்சிஎல்டி அனுமதி

நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் முடிந்தன. டிவிஸ் லேப்ரட்ரீஸ், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோல் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ் பங்குகள் விலை சரிந்தன.

நிப்டி துறைகளில் உலோகத்துறை பங்கு மதிப்பு 3 சதவீதம் சரிந்தது, ஆட்டோமொபைல் துறை பங்கு ஒரு சதவீதம் வீழ்ந்தது.