சொத்து மதிப்பு உயர்வில், அம்பானி, அதானியை பின்னுக்குத் தள்ளிய சாவித்ரி ஜிண்டால்..

இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால், சொத்து மதிப்பு உயர்வில் அம்பானி மற்றும் அதானியை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.. 

Savitri Jindal beats Mukesh Ambani and Gautam Adani in net worth surge Rya

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி  உள்ளிட்ட பெரும் பணக்கார்களை சாவித்ரி ஜிண்டால் பின்னுக்கு தள்ளி உள்ளதாக ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த காலண்டர் ஆண்டில் ஜிண்டாலின் சொத்து மதிப்பு 9.6 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு இதனுடன் ஒப்பிடும்போது சுமார் 5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு உயர்வு அவரை இந்தியாவின் ஐந்தாவது பணக்காரராக மாற்றியுள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது,

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

நாட்டின் எஃகு தொழிலில் முன்னணியில் OP ஜிண்டால் குழுமத்தின் தலைவர் தான் இந்த சாவித்ரி ஜிண்டால் சாவித்ரி ஜிண்டாலின் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் இந்த வணிகத்தைத் தொடங்கினார். JSW ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் & பவர், JSW எனர்ஜி, ஜிண்டால் ஹோல்டிங்ஸ், JSW Saw மற்றும் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் போன்ற எஃகுத் துறையின் பல்வேறு நிறுவனங்களை ஜிண்டால் குழுமம் கொண்டுள்ளது.

மற்ற இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது?

HCL டெக்னாலஜிஸ் நிறுவனரான ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு, கடந்த காலண்டர் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. DLF நிறுவனம் கேபி சிங்கின் சொத்து 7 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. ர். ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா, ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஷாபூர் மிஸ்திரி ஆகியோர் தலா 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்வு பதிவு செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் ரூபாய் அதிகரிப்பு; மத்திய அரசு எடுத்த முடிவுகளால் அதிரடி மாற்றம்!

இந்திய தொழிலதிபர்களில் அதிக லாபம் ஈட்டியவர்களில் சுனில் மிட்டல், எம்.பி. லோதா, ரவி ஜெய்ப்ரியா மற்றும் திலீப் ஷாங்வி உள்ளிட்டோரும் அடங்குவர். ஆனால் அதே நேரம் கௌதம் அதானியின் சொத்து  மதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.  அவரது நிகர மதிப்பு 35.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 85.1 பில்லியன் டாலர்களாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரண்டாவது பணக்கார இந்தியர் என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios