Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ 5,000 மற்றும் ரூ 10,000 நோட்டுகள்! எப்போது பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது?

ரிசர்வ் வங்கி இந்தியாவில் முதன்முதலில் 1938 இல் ரூ. 10,000 நோட்டை அச்சிட்டது.

Rs 5,000 and Rs 10,000 notes in circulation in India! When was demonetisation done?
Author
First Published May 24, 2023, 4:33 PM IST

புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது, மேலும் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றலாம் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமான தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் உட்பட பல வங்கிகள் ரூபாய் நோட்டுகளை மாற்றும் செயல்முறை குறித்து விளக்கம் அளித்துள்ளன.

பணத்தை டெபாசிட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ரொக்க டெபாசிட் தொடர்பான வங்கிகளின் நடைமுறை தொடரும் எனவும், ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக, வங்கிகள் தங்கள் சொந்த செயல்முறை மற்றும் விதிகளை பின்பற்றும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க : 2,000 ரூபாயை நாங்க இங்கேயும் மாத்துவோம்ல.. பெட்ரோல் பங்கில் குவிந்த மக்கள் - ஏன் தெரியுமா?

ஆனால் இந்திய ரிச்ர்வ வங்கியால் இதுவரை அச்சிடப்பட்ட ரூபாய் 2,000 நோட்டு தான், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டா? இல்லை. இந்தியாவில் முன்பு ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், ரிசர்வ் வங்கியால் இதுவரை அச்சிடப்பட்ட அதிகபட்ச மதிப்பு ரூபாய் 10,000 ஆகும். ரிசர்வ் வங்கி முதன்முதலில் 1938 இல் ரூ. 10,000 நோட்டை அச்சிட்டது. ஆனால், 1946-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த 10,000 ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது, ஆனால் 1954 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக 1978 இல் மீண்டும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கி, முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில், ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. பொதுக் கணக்குக் குழுவிற்கு ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி 2014 இல் பரிந்துரை செய்தது. பணவீக்கத்தால் ரூ.1,000 நோட்டின் மதிப்பு குறைந்து வருவதே இந்த யோசனையின் பின்னணியில் கூறப்பட்ட காரணம்.

எனினும் மே 2016 இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, புதிய ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான தனது கொள்கை முடிவைப் பற்றி ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது, இறுதியாக ஜூன் 2016 இல் அச்சகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அப்போதைய இந்திய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி, 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளுக்கான பரிந்துரையை அரசாங்கம் ஏற்கவில்லை, அதற்கு மாற்று நாணயம் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றும், அதனால் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு சென்றது என்றும் கூறினார்.

பின்னர் ஒரு கட்டத்தில், ரகுராம் ராஜன், கள்ளநோட்டு அச்சம் காரணமாக பெரிய மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைத்திருப்பது கடினம் என்று கூறினார். அதிக மதிப்புள்ள நோட்டுகளைச் செய்தால், எவ்வளவு மோசடி நடக்கும் என்பது குறித்து சில கவலைகள் உள்ளன என்று ரகுராம் ராஜன் செப்டம்பர் 2015 இல் கூறினார், 

சிறிய கொள்முதலுக்குக் கூட அதிக எண்ணிக்கையிலான கரன்சி நோட்டுகள் தேவைப்படும் அளவுக்கு நாணயத்தின் மதிப்பு மிகவும் குறையும் போது, மிக அதிக பணவீக்கத்தின் காரணமாக நாடுகள் பொதுவாக உயர் மதிப்புடைய நோட்டுகளை அச்சிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகின் துன்பமான நாடுகள் பட்டியல் : முதலிடத்தில் ஜிம்பாப்வே.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

Follow Us:
Download App:
  • android
  • ios