உலகின் துன்பமான நாடுகள் பட்டியல் : முதலிடத்தில் ஜிம்பாப்வே.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
உலகின் துன்பமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.
புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கே தனது வருடாந்திர துன்ப குறியீட்டை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பட்டியலின் படி ஜிம்பாப்வே, உலகின் மிகவும் துன்பமான நாடாக உள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதாரத் தவறான நிர்வாகம் ஆகியவை ஜிம்பாப்வே மக்களின் மகிழ்ச்சியற்ற நிலைக்கு காரணம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
157 நாடுகளை ஆய்வு செய்த பிறகு இந்த துன்பக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. துன்பக் குறியீடு என்பது ஆண்டு இறுதி வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வங்கிக் கடன் விகிதங்களின் மற்றும் தனிநபர் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது.
ஜிம்பாப்வே தவிர, வெனிசுலா, சிரியா, லெபனான் மற்றும் சூடான் ஆகிய நாடுகள், இந்த பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்தன. சிரியாவை தவிர மற்ற நாடுகளின் துயரத்திற்கு முக்கிய காரணியாக பணவீக்கம் உள்ளது. அதே நேரத்தில் சிரியா வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா ஆகியவை முதல் 15 இடங்களைப் பிடித்த மற்ற நாடுகள் ஆகும்.
இதையும் படிங்க : கொரோனாவை விட கொடிய நோய்க்கு உலகம் தயாராக வேண்டும்.. WHO தலைவர் எச்சரிக்கை..
இந்த பட்டியலில் இந்தியா 103வது இடத்தில் உள்ளது. வேலையின்மை என்பது இந்தியாவின் துயரத்திற்கு பங்களிக்கிறது. எனினும் பிரேசில் (27), பாகிஸ்தான் (35), நேபாளம் (63), ஸ்வீடன் (88) போன்ற நாடுகளை விட இந்தியா முன்னேறிய இடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி அறிக்கையின் மூலம் தொடர்ந்து 6 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தரவரிசையில் உள்ள பின்லாந்து, துன்பக் குறியீட்டில் 109வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 134 வது இடத்தில் உள்ளது.
தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், உலகின் மிக துன்பமான நாடுகளின் பட்டியலில் 35 வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் மிகவும் பங்களிக்கும் காரணியாக உள்ளது. பகுப்பாய்வு செய்யப்பட்ட அனைத்து 157 நாடுகளில், சுவிட்சர்லாந்து மிகவும் குறைவான துன்பமான நாடாக 157 வது இடத்தைப் பிடித்தது, குவைத் (156), அயர்லாந்து (155), ஜப்பான் (154), மலேஷியா (153), தைவான் (152), நைஜர் (151), தாய்லாந்து (150), டோகோ (149), மால்டா (148) ஆகியவை மிகக் குறைவான துன்ப நிலையில் உள்ளன.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி.. மூவர்ண கொடியால் ஜொலிக்கும் சிட்னி துறைமுகம், ஒபேரா ஹவுஸ்