Reliance Shares Value: 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரிலையன்ஸ் பங்குகளின் பதிவை ரத்தன் தில்லான் தனது வீட்டில் கண்டுபிடித்துள்ளார். இந்தப் பங்குகளின் மதிப்பு தெரியாத அவர், எக்ஸ் தளத்தில் உதவி கோரினார். அவரது பதிவி இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஒரு நபர் இரண்டு ஆவணங்களின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு நெட்டிசன்களிடம் உதவி கேட்டார். இந்த இரண்டு ஆவணங்களையும் எங்கள் வீட்டில் கண்டெடுத்தேன். இவற்றை வைத்து என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு ஆவணங்களையும் கவனமாக ஆராய்ந்த நெட்டிசன்கள், அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறப்போவதாக வாழ்த்து தெரிவித்தனர். அந்த ஆவணத்தில் என்ன இருந்தது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
ரிலையன்ஸ் பங்கு வாங்கியதற்கான இரண்டு ஆவணங்களை ரத்தன் தில்லான் எக்ஸ் கணக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த இரண்டு ஆவணங்களையும் எங்கள் வீட்டில் கண்டெடுத்தேன். ஆனால் எனக்கு பங்குச் சந்தை பற்றி அதிகமாகத் தெரியாது என்று கூறியுள்ள அவர், ரிலையன்ஸ் குழுமத்தை டேக் செய்து, "இந்தப் பங்குகளை நாங்கள் எவ்வாறு பெற வேண்டும் என உதவுங்கள்" என்று கேட்டிருந்தார்.
ரத்தன் தில்லானின் பதிவிலிருந்து இந்த இரண்டு ரிலையன்ஸ் பங்குகளும் 1987 மற்றும் 1992 க்கு இடையில் வாங்கப்பட்டுள்ளன. தில்லான் குடும்பம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 30 பங்குகளை வாங்கியது. முதல் முறையாக 1987 ஆம் ஆண்டு, 20 பங்குகள் வாங்கப்பட்டன, இரண்டாவது முறையாக 1992 ஆம் ஆண்டு, 10 பங்குகள் வாங்கப்பட்டன. அந்த நேரத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 10 ரூபாயாக இருந்தது. இந்தப் பங்குகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அப்போது டிஜிட்டல் வடிவம் இல்லாததால், இந்த வகையான ஆவணங்கள் (பத்திரங்கள்) பங்கு வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்தப் பங்குகளின் தற்போதைய விலை என்ன?
கடந்த 30 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் 30 ஆண்டுகளில் மூன்று முறை பங்குகளைப் பிரித்துள்ளதாக ஒரு பயனர் கூறினார். இந்தப் பிரிவின்படி, நீங்கள் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 960 ஆக இருக்கும். தற்போதைய விலையில், 960 பங்குகளின் விலை ரூ.11.88 லட்சமாக இருக்கும் என்றும் அந்தப் பயனர் விளக்கினார்.
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு, ரத்தன் தில்லானின் குடும்பத்தினர் 300 ரூபாய்க்கு 30 பங்குகளை வாங்கினர். இப்போது அவற்றின் மதிப்பு ரூ.11.88 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பங்கு பிரிப்பின் காரணமாக பங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வருகின்றன. ரத்தன் தில்லானின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் வீட்டிலேயே இன்னும் கொஞ்சம் தேடிப் பாருங்கள் என்று தில்லானைத் தூண்டிவ வருகிறார்கள். ஒருவேளை இதேபோல பழைய MRF பங்கு ஆவணங்கள் கிடைக்கக்கூடும் என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரத்தன் தில்லான் முதலில் இந்த ஆவணத்தை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். இதற்காக, இந்தப் பங்குகளை வைத்திருக்கும் நபரின் ஆவணங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பங்குகள் பின்னர் ஒரு டீமேட் கணக்கிற்கு மாற்றப்படும். அதன் பிறகு, தில்லான் குடும்பத்தினர் விரும்பினால் இந்தப் பங்குகளைப் பணமாக்கிக்கொள்ளலாம்.
