வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளான நேற்று (திங்கள்கிழமை) மாலை 6 மணி வரை 36.91 லட்சம் பேர் வருமான வரி கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
இதுவரை 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளான நேற்று (திங்கள்கிழமை) மாலை 6 மணி வரை 36.91 லட்சம் பேர் வருமான வரி கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
இ-ஃபைலிங் போர்டல் மாலை 6 மணி வரை 1.78 கோடிக்கும் அதிகமான வெற்றிகரமான உள்நுழைவுகளைக் கண்டுள்ளது என்று ஐ-டி துறை தெரிவித்துள்ளது. "இதுவரை (ஜூலை 31) 6.50 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அதில் இன்று ஒரே நாளில் மாலை 6 மணி வரை சுமார் 36.91 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன!" என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத சம்பளதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி திங்கள்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வருமான வரி தாக்கல் அதிகரிப்பு வரி செலுத்துவோருக்கான தளத்தை விரிவுபடுத்துதல், மேம்படுத்தப்பட்ட இணக்கம் மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்க வருவாய்த் துறை மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் என்று வருமான வரித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வருமான வரித்துறை அதிக ஆபத்துள்ள வழக்குகளை அடையாளம் காணவும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடங்கவும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை விரிவாகப் பயன்படுத்துகிறது.
தணிக்கை அல்லாத வழக்குகளில் வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி கால அவகாசம் முடிந்து இன்று முதல் தாமதமாக வருமான வரி கணக்குளைச் சமர்ப்பிப்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்கள் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 20.33 சதவீதம் அதிகரித்து ரூ.19.68 லட்சம் கோடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
