இவருதான் அந்த சீட்டிங் சாம்பியன்... சம்பளக் கணக்கில் மனைவி பெயரைச் சேர்த்து ரூ.4 கோடி சுருட்டிய ஊழியர்!

ராதாபல்லவ் நாத் தன் மனைவி பெயரை சம்பளப் பட்டியலில் சேர்த்து வேலை பார்த்த நிறுவனத்திற்கு ரூ.4.2 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளார். அந்தப் பணத்தின் மூலம் பல சொத்துக்களை வாங்கியுள்ளார்.

Man Puts Unemployed Wife On Payroll For 10 Years, Cheats Firm Of Rs 4 Crore

ஒரு அசாதாரண நிதிக் குற்றச் சம்பவத்தில், தனியார் ஆட்சேர்ப்பு நிறுவன ஊழியர் ஒருவர் தனது வேலையில்லாத மனைவியின் பெயரையும் சம்பளப் பட்டியலில் சேர்த்து, அவருக்கு தொடர்ந்து நிறுவனத்தில் இருந்து சம்பளம் கிடைத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து அவரது மனைவிக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. வருடக்கணக்காக நீடித்த இதன் நூதனத் திட்டம் மூலம் அவர் சுமார் 4 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

டெல்லியைச் சேர்ந்த மேன்பவர் குரூப் சர்வீஸ் லிமிடெட் (ManpowerGroup Service Private Limited) என்ற நிறுவனத்தில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இந்நிறுவனம் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த மோசடியைப் பற்றிக் கண்டுபிடித்தது.

இவருதான் அந்த சீட்டிங் சாம்பியன்... சம்பளக் கணக்கில் மனைவி பெயரைச் சேர்த்து ரூ.4 கோடி சுருட்டிய ஊழியர்!

நிறுவனம் சார்பில் உள் விசாரணையை தொடங்கியது. அதில் மோசடி நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, ராதாபல்லவ் நாத் டிசம்பர் 11, 2022 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த வாரம், டெல்லி காவல்துறையில் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.

Man Puts Unemployed Wife On Payroll For 10 Years, Cheats Firm Of Rs 4 Crore

மேன்பவர் குரூப் போலீசில் அளித்த புகாரின்படி, அதன் ஊழியர்களில் ஒருவரான ராதாபல்லவ் நாத், 2008 இல் நிதிப்பிரிவு உதவி மேலாளராக சேர்ந்தார். பின்னர் மேலாளராக பதவி உயர்வு பெற்றார். அப்போது நிறுவனத்தின் செலவில் தனது வேலையில்லாத மனைவிக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

விண்வெளியில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்னி மறையும் மர்ம ஒளி! அதிசயிக்கும் விஞ்ஞானிகள்!!

நிறுவனத்தில் சம்பளம் வழங்குவதற்கான இறுதி ஊதியப் பதிவேட்டை வங்கிக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்ற பல்லவ் நாத், சம்பளப் பதிவேட்டை வங்கிக்கு அனுப்புவதற்கு முன், தன் மனைவியின் பெயரையும் செருகிவிட்டார் என்று நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

2012 முதல் தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு சட்டவிரோதமாக ரூ.3.6 கோடியை மாற்றியதாக ராதாபல்லவ் நாத் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது மட்டுமின்றி பல ஆண்டுகளாக தனது சொந்த சம்பளத்தையும் உயர்த்தி ரூ.60 லட்சத்தை தனது கணக்கிற்கு மாற்றியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் அந்த நிறுவனத்திற்கு மொத்தம் ரூ.4.2 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற நிதித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் அவரது சொந்த ஊரான ஒடிசாவில் சொத்துக்களை வாங்கவும் மோசடி செய்த பணத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.

யாரும் இல்லாத வீட்டில் புகுந்து அசந்து தூங்கிய இளைஞர்! போராடி வெளியேற்றிய போலீஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios