முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 2, Feb 2019, 4:47 PM IST
real estate department developing in india in 2019
Highlights

ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்து வரும் நிலையில் தற்போது தென் சென்னையில் அதிக வீடுகள் விற்பனை ஆகி உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

முதலிடம் பிடித்த தென் சென்னை..! 

ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்து வரும் நிலையில் தற்போது தென் சென்னையில் அதிக வீடுகள் விற்பனை ஆகி உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சற்று தொய்வில் இருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.

மும்பை, புனே, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னை உள்பட இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்கள் 2017 ஆம் ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொருத்தமட்டில் வழிகாட்டி மதிப்பை குறைத்தது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறை ஆக்கப்பட்டது ஆகிய மாற்றங்கள் மக்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் வீடு வாங்கும் எண்ணம் அதிகரித்து. 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 2018ஆம் ஆண்டு 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதிலும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதுவும் சென்னையில் குறிப்பாக தென் சென்னையில் அதிக அளவு வீடு விற்பனை ஆகி உள்ளது. தென்சென்னைக்கு அடுத்தபடியாக மேற்கு சென்னை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தென் சென்னையில் 10491 வீடுகளும், மேற்கு சென்னையில் 3,734 வீடுகளும், வட சென்னையில் 832 வீடுகளும், மத்திய சென்னையில் 927 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இந்த அனைத்து தகவலும் கடந்த வாரம் வெளியான நைட் பிராங்க் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையில் இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் துறை எப்படி இருந்தது என்பதையும், தற்போது வளர்ச்சியடைந்து வரும் விதத்தையும் புள்ளி விவரத்தோடு தெரிவித்து உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு வீடு வாங்கும் ஒரு ஆசையை வளர்த்து அதனை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது மத்திய அரசு.

அதற்கேற்றவாறு புதிதாக வீடு வாங்கும் நபர்களுக்கு மத்திய அரசு இரண்டரை லட்சம் ரூபாய் வரை மானியம் கொடுக்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் வீடு வாங்கும் எண்ணம் அதிகரித்து தற்போது ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்து உள்ளது என்றே கூறலாம்.

loader