2 ஆயிரம் ரூபாய் நோட்டின் புழக்கம் பல மடங்கு சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 7 .2 கோடி ரூபாய்க்குள் அதன் புழக்கம் சுருங்கியுள்ளதால் இந்திய ரிசர் வங்கி முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து ஏற்கனவே புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிதாக 2,000 ரூபாய்,  500 ரூபாய், மற்றும் 200 ரூபாய்  நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. மொத்தமுள்ள 329 கோடி ரூபாயில், 2000 ரூபாயின் புழக்கம் நடப்பு நிதியாண்டில் 7.2 கோடி ரூபாயாக சுருங்கியுள்ளது.  

2000 ரூபாய் நோட்டுகளை பரிமாறிக்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் காரணமாக, அவற்றின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த 2017-18 நிதியாண்டின் போது 6 லட்சத்து 72 ஆயிரத்து 600 கோடி அளவிற்கு இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19 ம் ஆண்டில் 6 லட்சத்து 58 ஆயிரத்து 200  கோடி ரூபாயாக குறைந்துள்ளது. சுமார் 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவற்றை, அச்சடிப்பதை நிறுத்திட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.